- Home
- டெக்னாலஜி
- தொலைபேசி
- 50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
50MP கேமரா, 6,000mAh மெகா பேட்டரி: இந்தியாவில் களமிறங்கியது ரெட்மியின் புது ஃபோன்; பட்ஜெட் பிரியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
சியோமி நிறுவனம் தனது புதிய 'ரெட்மி 17C 5G' ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 50MP கேமரா மற்றும் 33W வேகத்தில் சார்ஜ் ஆகும் 6,000mAh மெகா பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது ‘ரெட்மி 17C 5G
ரெட்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 17C 5G’ (Redmi 17C 5G) இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் அறிமுகமான 'ரெட்மி 17 5G' போனைத் தொடர்ந்து இந்த புதிய போன் தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இது மீடியாேடெக் டைமன்சிட்டி 6000 சீரிஸ் புரோசசர், 6,000mAh பேட்டரி மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட 6.9 இன்ச் திரையைக் கொண்டுள்ளது.
விலை & விற்பனை விவரங்கள்
4GB RAM + 128GB Storage (அடிப்படை வேரியண்ட்) - ரூ.20,999
6GB RAM + 128GB Storage (உயர் வேரியண்ட்) - ரூ.22,999
இந்த ஸ்மார்ட்போன் அக். 7-ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளம் மற்றும் சியோமியின் (Xiaomi) அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வருகிறது. 'காஃபி புரூ' (Coffee Brew), 'டார்க் நைட்' (Dark Night) மற்றும் 'பார்பிள் டான்' (Purple Dawn) ஆகிய 3 வண்ண விருப்பங்களில் இது கிடைக்கிறது.
ரெட்மி 17C 5G சிறப்பம்சங்கள்
டிஸ்ப்ளே - 6.9 இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) எல்.சி.டி (LCD) தொடுதிரை. இது 120Hz புதுப்பிப்பு வீதம், 810 நிட்ஸ் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்களைக் கொண்டுள்ளது.
புரோசசர் - ஆக்டா-கோர் ‘மீடியாடெக் டைமன்சிட்டி 6300’ சிப்செட் மூலம் இயங்குகிறது. இதனுடன் Mali-G57 MC2 ஜி.பி.யு வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட சியோமியின் HyperOS 3 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
மெமரி (Memory)- 6GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டாரேஜ். மேலும், 6GB வரை விர்ச்சுவல் ரேம் விரிவாக்கம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை சேமிப்பகத்தை உயர்த்திக் கொள்ளும் வசதியும் உண்டு.
கேமரா, பேட்டரி & சார்ஜிங்
பின்பக்க கேமரா - f/1.8 அப்பர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ஒற்றை கேமரா (1080p/ 30 fps வீடியோ பதிவு செய்யக்கூடியது). முன்பக்க கேமரா - செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக f/2.0 அப்பர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா. எச்.டி.ஆர் (HDR), போர்ட்ரெய்ட், நைட் மோட், டைம்-லேப்ஸ் உள்ளிட்ட கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. பேட்டரி & சார்ஜிங் - 33W அதிவேக சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,000mAh மெகா பேட்டரி.
பாதுகாப்பு & இதர அம்சங்கள் - பக்கவாட்டில் வைக்கப்பட்ட கைரேகை ரேகை சென்சார் மற்றும் தூசி/நீர் துளிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் IP64 ரேட்டிங். இணைப்பு வசதிகள் (Connectivity) - டூயல் சிம் (Dual-SIM), 5G, 4G LTE, டூயல் பேண்ட் வைஃபை (Wi-Fi), புளூடூத் 5.4, யு.எஸ்.பி டைப்-சி போர்ட் (USB Type-C), ஜிபிஎஸ் (GPS) போன்ற வசதிகள் உள்ளன. அளவு & எடை - 171.56 x 79.47 x 7.99 மி.மீ அளவுடன் சுமார் 211 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

