MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • JioPC: பழைய லேப்டாப் தூக்கிப்போடாதீங்க... வெறும் ரூ.11-க்கு 8GB RAM, 500GB ஸ்டோரேஜ் சூப்பர் கம்ப்யூட்டர் தரும் ஜியோ!

JioPC: பழைய லேப்டாப் தூக்கிப்போடாதீங்க... வெறும் ரூ.11-க்கு 8GB RAM, 500GB ஸ்டோரேஜ் சூப்பர் கம்ப்யூட்டர் தரும் ஜியோ!

JioPC: ரிலையன்ஸ் ஜியோவின் கிளவுட் தொழில்நுட்பம் மூலம், பழைய கணினிகள், லேப்டாப்களை அதிவேகக் கணினியாக மாற்ற முடியும். நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.11 செலவில் (10+2 மாத வருடாந்திரத் திட்டம்) 4 vCPUs, 8GB RAM மற்றும் 500GB கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 01 2026, 07:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டீ விலையில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்: ஜியோவின் புரட்சி!
Image Credit : Google

டீ விலையில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்: ஜியோவின் புரட்சி!

JioPC: சாலையோர டீ கடையில் ஒரு கப் டீ குடிக்க இப்போது குறைந்தது 12 முதல் 15 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், அதைவிடக் குறைந்த செலவில் வெறும் ரூ.11-க்கு ஒரு முழுமையான கம்ப்யூட்டரை உங்கள் கைகளில் கொடுத்தால் எப்படி இருக்கும்?

இந்திய டெலிகாம் சந்தையில் டேட்டா புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ, இப்போது கம்ப்யூட்டிங் உலகிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. பழைய, வேகம் குறைந்த லேப்டாப்பையோ அல்லது கம்ப்யூட்டரையோ தூக்கி எறியாமல், புதிய கம்ப்யூட்டர் வாங்க ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவழிக்காமல், கிளவுட் தொழில்நுட்பம் மூலம் அதிவேகக் கணினியாக மாற்றுகிறது ஜியோபிசி (JioPC).

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நாள் ஒன்றுக்கு ரூ.11 கணக்கு எப்படி வருகிறது?
Image Credit : Google

நாள் ஒன்றுக்கு ரூ.11 கணக்கு எப்படி வருகிறது?

ஜியோபிசி வழங்கும் வருடாந்திர திட்டத்தின் சலுகைதான் இதன் முக்கிய சிறப்பம்சம். 10 + 2 மாதங்கள் திட்டம் (மொத்தம் 12 மாதங்கள் / 365 நாட்கள்) ரூ.4,000 (ஜிஎஸ்டி வரி உட்பட; விளம்பர சலுகைகளில் இது ரூ.2,000 வரை கூட கிடைக்கிறது). இந்த ரூ.4,000 தொகையை 365 நாட்களுக்குப் பிரித்தால், தோராயமாக ஒரு நாளுக்கான செலவு வெறும் ரூ.10.95 (சுமார் ₹11) மட்டுமே.குறுகிய காலத்திற்குப் பயன்படுத்த விரும்புவோருக்கு, 2 மாதங்களுக்கான கட்டணம் ரூ.1,000 (ஜிஎஸ்டி உட்பட) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.11 செலவில் அன்றாடக் கணினி வேலைகளைச் செய்து முடிக்கும் சுதந்திரம் கிடைப்பது டிஜிட்டல் உலகில் மிகப்பெரிய விஷயம்.

35
ரூ.11-ல் என்னென்ன சிறப்பம்சங்கள் கிடைக்கின்றன?
Image Credit : Google

ரூ.11-ல் என்னென்ன சிறப்பம்சங்கள் கிடைக்கின்றன?

குறைந்த கட்டணம் என்பதற்காக வசதிகள் குறைவாக இல்லை. வழக்கமான அன்றாடப் பயன்பாடுகளுக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் இதில் அடக்கம். 4 விர்ச்சுவல் சிபியு (vCPUs). 8GB RAM மல்டி-டாஸ்கிங் மற்றும் பிரவுசிங் தடையின்றி இயங்கும். 500GB Cloud Storage, ஃபைல்கள், ஆவணங்கள், மீடியாக்களைப் பத்திரமாகச் சேமிக்கலாம். உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux) அடிப்படையிலான விர்ச்சுவல் டெஸ்க்டாப். வெறும் 5 நிமிடங்களில் எந்தவித புதிய ஹார்டுவேர் இணைப்பும் இல்லாமல் உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். (கூடுதல் திறன் தேவைப்படுபவர்களுக்கு 8 vCPUs, 16GB RAM மற்றும் 1TB Storage கொண்ட JioPC Ultra திட்டமும் உள்ளது).

45
ஜியோ கனெக்ஷன் இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாமா?
Image Credit : Jiopc

ஜியோ கனெக்ஷன் இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாமா?

ஆம், இதுதான் இந்த சேவையின் மிகப்பெரிய சிறப்பம்சம். எந்த நெட்வொர்க்கிலும் வேலை செய்யும். ஏர்டெல், பிஎஸ்என்எல், வி (Vi) அல்லது எந்தவொரு பிராட்பேண்ட்/வைஃபை நெட்வொர்க் வைத்திருந்தாலும் ஜியோபிசியை பிரவுசர் மூலமாக இயக்கலாம்.எந்த மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம்.

பதிவு செய்வதற்கு ஜியோ எண் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; எந்த மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம்.எளிய பிரவுசர் லாகின்: உங்கள் பழைய கம்ப்யூட்டரில் உள்ள இணைய உலாவியைத் (Browser) திறந்து, லாகின் செய்தாலே புதிய கணினி திரை கண்முன்னே விரிந்துவிடும்.

55
யாருக்கு இது வரப்பிரசாதம்?
Image Credit : Reliance jiopc

யாருக்கு இது வரப்பிரசாதம்?

கோடிங் பயில, ஆன்லைன் தேர்வுகள் எழுத, திட்டப் பணிகளை (Projects) ஆவணப்படுத்த இது பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 6 அல்லது 8 வருடப் பழைய கம்ப்யூட்டரில் ரேம் பற்றாக்குறை அல்லது ஹார்டு டிஸ்க் வேகம் குறைவாக இருந்தால், புதிய பாகங்களை வாங்கிப் பணத்தை வீணாக்காமல் ஜியோபிசி மூலம் புத்துயிர் கொடுக்கலாம்.

பில்லிங், அலுவலக ஆவணங்கள், மின்னஞ்சல் மற்றும் விரிதாள்கள் (Spreadsheets) போன்ற அடிப்படை தேவைகளுக்கு விலையுயர்ந்த கணினிகள் சிறு வணிகர்கள் & ஃப்ரீலான்ஸர்கள் வாங்கத் தேவையில்லை. விலையுயர்ந்த லேப்டாப்களை வாங்க முடியாத நடுத்தரக் குடும்பங்களுக்கும், பழைய கணினிகளை அப்புறப்படுத்த விரும்பாதவர்களுக்கும் இந்த ரூ.11 கிளவுட் கணினி திட்டம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் ஒரு சிறப்பான முன்னெடுப்பு.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rare snake spotted: பார்க்க ஒல்லி... ஆனால் புல்லட் வேகம்; 150 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட அரிய மணல் பாம்பு!
Recommended image2
Jio Offer: ரூ.299-க்கே 4ஜி போன்.. ஜியோ 10வது ஆண்டு சலுகை..எப்படி வாங்குவது தெரியுமா?
Recommended image3
Heat Bag Sealer : ரூ.240 இருந்தால் போதும்! சமையலறை வேலையை ஈஸியாக்கும் மாடர்ன் கேட்ஜெட்
Related Stories
Recommended image1
Watch: மணிக்கு 285 கி.மீ வேகம்.. பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் உருவான 4 பெரும் புயல்கள்; அதிரவைக்கும் படங்கள்!
Recommended image2
கிரியேட்டர்ஸ், சினிமா பிரியர்கள், கேமர்ஸ்: 2026-ன் சிறந்த 5 டேப்லெட்டுகள்; சிறப்பம்சங்களும் இந்திய விலையும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved