MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Gadgets: வீட்டில் இருக்க வேண்டிய சூப்பர் கிச்சன் கேஜட்ஸ்..இனி உங்க சமையலும் செம ஈஸி!

Kitchen Gadgets: வீட்டில் இருக்க வேண்டிய சூப்பர் கிச்சன் கேஜட்ஸ்..இனி உங்க சமையலும் செம ஈஸி!

Kitchen Gadgets: சமையல் வேலைக்கு அதிக நேரம் செலவாகிறதா? காய்கறி நறுக்குவது முதல் பூண்டு நசுக்குவது, முட்டை பிரிப்பது, பாத்திரம் கழுவுவது வரை தினசரி சமையல் வேலைகளை எளிதாக்க உதவும் கிச்சன் கேஜட்ஸ் (Kitchen Gadgets) என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

6 Min read
Author : Vishnupriya
Published : Sep 22 2026, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
இனி உங்க சமையலும் செம ஈஸி
Image Credit : pinterest

இனி உங்க சமையலும் செம ஈஸி

காலையில் எழுந்ததும் சமையலறைக்குள் போனா வேலை முடியவே மாட்டேங்குதா? இந்த கிச்சன் கேஜட்ஸ் (Kitchen Gadgets) உங்களுக்குத்தான்.

காலை எழுவது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை வீட்டு வேலை, சமையல் என ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறீர்களா? அதிலும் காலையில் டிபன், மதிய சாப்பாடு எல்லாம் அவசர அவசரமாக தயார் செய்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்தான்.

ஸ்மார்ட் கிச்சன் கேஜட்ஸ்

வெங்காயம் வெட்டுவது, காய்கறி நறுக்குவது, பூண்டு நசுக்குவது, பாத்திரம் கழுவுவது என சின்னச் சின்ன வேலைகளிலேயே நிறைய நேரம் போய்விடும். இதையெல்லாம் கொஞ்சம் சீக்கிரமா முடிக்க முடியாதா? என்று நினைப்பவர்களுக்காகவே பல ஸ்மார்ட் கிச்சன் கேஜட்ஸ் வந்துவிட்டன.

காய்கறிகளை நிமிடங்களில் நறுக்குவது முதல் பூண்டை நசுக்குவது, முட்டையின் மஞ்சள் கருவைப் பிரிப்பது, பாத்திரம் கழுவுவதை எளிதாக்குவது வரை ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கேஜட்ஸ் இருக்கிறது.

இந்த சின்னச் சின்ன கிச்சன் கேஜட்ஸ் இருந்தால் போதும். சமையலறையில் மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டாம். நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தி சமையல் வேலையை இன்னும் ஈஸியாக்கலாம். வாங்க, அந்த சூப்பரான கேஜட்ஸ் (Gadgets) என்னென்ன என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
டீ வடிகட்டி (tea strainer)
Image Credit : pinterest

டீ வடிகட்டி (tea strainer)

டீ போடுவதைக் காட்டிலும், டீ போட்ட பிறகு பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் டீ தூளை சுத்தம் செய்வதுதான் பெரிய வேலையாக இருக்கிறதா? அதற்குத்தான் இந்த ஸ்மார்ட் டீ வடிகட்டி (tea strainer).

தேவையான அளவு டீ தூளை இந்த வடிகட்டிக்குள் போட்டு, அதை பால் பாத்திரத்திற்குள் பொருத்திவிட்டால் போதும். பால் கொதிக்கும்போது, டீ தூளின் சாறு மட்டும் பாலில் கலந்து சுவையான டீ தயாராகிவிடும். டீ தூளின் தேவையற்ற துகள்கள் அனைத்தும் வடிகட்டிக்குள்ளேயே தங்கிவிடும்.

இதனால் பாத்திரத்தில் டீ தூள் ஒட்டுவதும் குறையும். டீ போட்ட பிறகு பாத்திரத்தை நீண்ட நேரம் ஊறவைத்து தேய்த்துக் கழுவ வேண்டிய சிரமமும் குறையும்.

சமையலறை வேலைகளை ஈஸியாக்க நினைப்பவர்களுக்கு இந்த டீ வடிகட்டி ஒரு சின்ன சாதனம். ஆனால் தினசரி 3 அல்லது 4 முறை டீ போடுபவர்களுக்கு இதன் பயன்பாடு பெரிய உதவியாக இருக்கும்.

311
மசாலா உலர்த்தும் வலை (Food Drying Net)
Image Credit : pinterest

மசாலா உலர்த்தும் வலை (Food Drying Net)

மிளகாய், மசாலாப் பொருட்கள், வத்தல் என வீட்டில் உலர்த்த வேண்டிய பொருட்கள் நிறைய இருக்கிறதா? அதற்காகத்தான் இந்தமசாலா உலர்த்தும் வலை (Food Drying Net)

உலர்த்த வேண்டிய உணவுப் பொருட்களை இந்த வலையில் பரப்பி வைத்து, மேலே உள்ள மூடியை மூடிவிட்டால் போதும். குறிப்பாக வீட்டின் மொட்டை மாடியில் வெயிலில் காய வைக்கும்போது, இனி காக்கை காவல் காக்க வேண்டிய அவசியமே இல்லை.

வலை அமைப்பு இருப்பதால் காகம், குருவி, புறா போன்ற பறவைகள் உணவுப் பொருட்களை எடுப்பதையும், பூச்சிகள் நேரடியாக படுவதையும் குறைக்க உதவும். அதே நேரத்தில் காற்றோட்டம் கிடைப்பதால் உணவுப் பொருட்களை உலர்த்துவதற்கும் வசதியாக இருக்கும். பயன்படுத்தி முடித்த பிறகு மடித்து வைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால், வீட்டில் அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது.

411
Onion Holder (வெங்காயம் பிடிப்பான்)
Image Credit : pinterest

Onion Holder (வெங்காயம் பிடிப்பான்)

வெங்காயம் வெட்டுறது கஷ்டமா? கண்ணீர், எரிச்சல், கையில் வெட்டிக்கிற பயம் இருக்கா? இனி இதெல்லாம் வேண்டாம்.

வெங்காயம் வெட்டும்போது கண்களில் கண்ணீர் வருவது, எரிச்சல் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால், கத்தி விரல்களில் பட்டுவிடுமோ என்ற பயம் இன்னொரு பக்கம். இந்த சின்ன Onion Holder (வெங்காயம் பிடிப்பான்) இருந்தால் வெங்காயம் வெட்டும் வேலையை இன்னும் சுலபமாக்கிக்கொள்ளலாம்.

வெங்காயத்தை Onion Holder-ல் பொருத்தி நன்றாகப் பிடித்துக்கொண்டு, அதன் இடைவெளிகளுக்கு இடையில் கத்தியால் வெட்டலாம். இதனால் வெங்காயம் கையில் வழுக்காமல் இருக்கும். மேலும், கத்தியை நேரடியாக விரல்களுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது.

அதேபோல், வெங்காயத்தை ஒரே அளவில் சீரான துண்டுகளாக வெட்டுவதற்கும் இந்த சாதனம் உதவியாக இருக்கும். குழம்பு, பொரியல், பிரியாணி, சாலட் உள்ளிட்ட பல்வேறு உணவுகளுக்குத் தேவையான வெங்காயத்தை எளிதாக வெட்டிக்கொள்ளலாம். சமையலறையில் இந்த சின்ன Onion Holder-ஐ வைத்துக்கொள்ளுங்கள்.

511
Corn Peeler - சோள மணிகளைப் பிரிக்கும் கருவி
Image Credit : pinterest

Corn Peeler - சோள மணிகளைப் பிரிக்கும் கருவி

சோளக்கதிரில் இருந்து சோள மணிகளைப் பிரிக்க கஷ்டமா? இனி ஈஸியா செய்திடலாம். சோளக்கதிரை கத்தியால் சீவி, ஒவ்வொரு மணியாகப் பிரிப்பது கொஞ்சம் சிரமமான வேலைதான். அதற்காகத்தான் இந்த சோள மணிகளைப் பிரிக்கும் கருவி ( Corn Peeler அல்லது Stripper).

வேகவைத்த அல்லது பச்சை சோளக்கதிரை இந்தக் கருவியின் வழியாக நகர்த்தினால் போதும். இதில் உள்ள கூர்மையான பகுதி அல்லது சிறிய பற்கள், சோள மணிகளை கதிரிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க உதவும். இதனால் கத்தியால் சோளத்தை சீவும் சிரமம் குறைவதுடன், கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், குறைந்த நேரத்தில் சோள மணிகளைத் தயாரிக்க முடியும்.

சூப், சாலட், பாஸ்தா, ஃப்ரைடு ரைஸ், சாட் என பல்வேறு உணவுகளுக்குத் தேவையான சோள மணிகளைத் தயாரிக்க இந்தச் சிறிய கருவி கைகொடுக்கும். சோளம் சாப்பிடுவதையும், சோளத்தைத் தயாரிப்பதையும் இன்னும் ஈஸியாக்கணுமா? சமையலறையில் இந்த Corn Peeler-ஐ வைத்துக்கொள்ளுங்கள்.

611
Tender coconut Opener (இளநீர் திறப்பான்)
Image Credit : pinterest

Tender coconut Opener (இளநீர் திறப்பான்)

இளநீர் உடைக்கும்போது கை வலிக்குதா? சிரமப்படாமல் தேங்காயை திறக்க இதோ ஒரு ஈஸி கருவி.

இளநீர் குடிக்கும்போது அதில் ஓட்டை போடுவதுதான் பலருக்கும் சிரமமாக இருக்கும். குறிப்பாக கத்தி அல்லது கூர்மையான பொருட்களை வைத்து ஓட்டை போடுவது கவனமாக செய்ய வேண்டிய வேலை. இதற்காகவே Coconut Opener (தேங்காய்/இளநீர் ஓப்பனர்) போன்ற கருவிகள் பயன்படுகிறது.

இளநீரின் மேல் பகுதியில் கருவியை வைத்து அழுத்தி அல்லது திருப்பி ஓட்டை போட்டு, இளநீரை எளிதாக குடிக்க முடியும். இளநீரை கடையில் குடிப்பவர்களுக்கு இதன் தேவை இருக்காது. ஆனால், வீட்டிற்கு வாங்கி வந்து குடிப்பது அல்லது வீட்டு தோட்டத்தில் பரித்தது போன்றவைக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

711
Egg Separator (முட்டை பிரிப்பான்)
Image Credit : pinterest

Egg Separator (முட்டை பிரிப்பான்)

முட்டையின் வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும் பிரிக்க கஷ்டமா? இனி கையால் பிரிக்க வேண்டாம். கேக், குக்கீஸ் போன்ற உணவுகள் செய்யும்போது முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு தனித்தனியாக தேவைப்படும். ஆனால், முட்டையை உடைத்து கையால் பிரிக்கும்போது மஞ்சள் கரு உடைந்துவிடுவதோ, வெள்ளைக்கருவுடன் கலந்துவிடுவதோ நடக்கலாம். அதற்குத்தான் இந்த Egg Separator.

முட்டையை உடைத்து இந்தக் கருவியில் ஊற்றினால் போதும். இதில் உள்ள வடிகட்டி போன்ற அமைப்பு முட்டையின் வெள்ளைக்கருவை கீழே செல்ல அனுமதித்து, மஞ்சள் கருவை தனியாகத் தக்கவைக்க உதவும். இதனால் முட்டையைப் பிரிக்கும் வேலை விரைவாகவும் சுலபமாகவும் முடிந்துவிடும்.

கேக், பேக்கரி உணவுகள், ஆம்லெட், சாஸ் உள்ளிட்ட பல்வேறு சமையல் தேவைகளுக்கு முட்டையைத் தனித்தனியாகப் பிரிக்க இந்தச் சாதனம் பயனுள்ளதாக இருக்கும். முட்டையைப் பிரிக்க கிச்சனில் இனி டென்ஷன் வேண்டாம். இந்தச் சின்ன Egg Separator இருந்தாலே வேலை செம ஈஸி.

811
பாத்திரம் கழுவும் பிரஷ் ( soap dispensing dish brush )
Image Credit : pinterest

பாத்திரம் கழுவும் பிரஷ் ( soap dispensing dish brush )

பாத்திரம் தேய்க்கும்போது ஒரு கையில் ஸ்க்ரப்பர், இன்னொரு கையில் டிஷ் வாஷ் லிக்விட் பாட்டிலா? இனி அந்த சிரமம் வேண்டாம்.

பாத்திரம் கழுவும் பிரஷ் (Soap Dispensing Dish Brush) என்பது பாத்திரங்களை எளிதாக சுத்தம் செய்ய உதவும் ஒரு பயனுள்ள கிச்சன் கிளீனிங் சாதனம். இதன் கைப்பிடி பகுதியில் டிஷ் வாஷ் லிக்விட் நிரப்புவதற்கான சிறிய டேங்க் இருக்கும்.

தேவையான அளவு டிஷ் வாஷ் லிக்விட்டை அதில் நிரப்பிவிட்டு, பாத்திரம் தேய்க்கும்போது மேலே இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும். தேவையான அளவு சோப்பு நேரடியாக பிரஷ் பகுதியில் வெளியே வரும். அதைக் கொண்டு தட்டு, கிண்ணம், பாத்திரம், கடாய் போன்றவற்றை தேய்த்து சுத்தம் செய்யலாம். பாத்திரம் மட்டுமல்ல கேஸ் அடுப்பு மற்றும் சமயலறை சுவர்கள்ளையும் இதை கொண்டு சுத்தம் செய்யலாம.

இதனால் ஒவ்வொரு முறையும் தனியாக டிஷ் வாஷ் லிக்விட் பாட்டிலை எடுத்து ஊற்ற வேண்டிய வேலை குறையும். மேலும், கைகளில் சோப்பு நேரடியாகப் படுவதையும் ஓரளவு குறைக்க முடியும்.

911
சமையலறை எடை இயந்திரம் (Digital Kitchen Scale)
Image Credit : pinterest

சமையலறை எடை இயந்திரம் (Digital Kitchen Scale)

சமையலில் கொஞ்சம் போதும், ஒரு கைப்பிடி போதும்ன்னு அளவு போட குழப்பமா? இனி எல்லாமே சரியான அளவில்.

Digital Kitchen Scale (டிஜிட்டல் சமையலறை எடை இயந்திரம்) என்பது சமையலுக்குத் தேவையான பொருட்களின் எடையை துல்லியமாக அளக்க உதவும் சிறிய சாதனம். தினமும் சமையல் செய்பவர்களுக்கு இது பொதுவாக தேவைப்படாது. ஆனால், புதியதாக சமைப்பவர்கள் மற்றும் சமையல் வீடியோக்களை பார்த்து சமைப்பவர்களுக்கு அவர்கள் கூறும் அளவில் பொருள்களை எடுப்பதற்கு இது நிச்சயம் தேவைப்படும்.

அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இதன் மேல் வைத்து கிராம் அல்லது கிலோகிராம் அளவில் எடையை தெரிந்துகொள்ளலாம். பல Digital Kitchen Scale மாடல்களில் Tare வசதி இருக்கும். முதலில் காலி பாத்திரத்தை Scale மீது வைத்து Tare பட்டனை அழுத்தினால் அதன் எடை பூஜ்ஜியமாகிவிடும். பின்னர் பாத்திரத்திற்குள் பொருட்களைச் சேர்த்து, அவற்றின் எடையை மட்டும் தனியாக அளக்கலாம்.

பேக்கிங் முதல் தினசரி சமையல் வரை அளவு சரியா இருக்குமா? என்ற சந்தேகம் இனி வேண்டாம். இந்த Digital Kitchen Scale இருந்தால் தேவையான பொருட்களை சரியான அளவில் எடுத்து சமையலை ஈஸியாக்கலாம்.

1011
சூடான பாத்திரம் வைக்கும் மேட்  (heat recitant pot holder mat)
Image Credit : pinterest

சூடான பாத்திரம் வைக்கும் மேட் (heat recitant pot holder mat)

சூடான குக்கர், கடாய், பாத்திரத்தை நேரடியாக டைனிங் டேபிள் அல்லது கிச்சன் மேடையில் வைக்கிறீங்களா? இனி அந்த ரிஸ்க் வேண்டாம்.

பாத்திரம் வைக்கும் மேட் (Heat Resistant Pot Holder Mat ) என்பது சூடான பாத்திரங்களை பாதுகாப்பாக வைக்க உதவும் பயனுள்ள சமையலறை சாதனம்.

அடுப்பிலிருந்து இறக்கிய குக்கர், கடாய், தோசைக்கல், சூடான பாத்திரம் போன்றவற்றை நேரடியாக டேபிள் அல்லது கிச்சன் மேடையில் வைப்பதற்குப் பதிலாக, இந்த மேட்டின் மீது வைக்கலாம். இது சூடான பாத்திரத்தால் ஏற்படக்கூடிய கறை அல்லது மேற்பரப்பு சேதத்தின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

இதனை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளலாம் என்பதால் தினசரி சமையலுக்கு வசதியாக இருக்கும். சூடான பாத்திரத்தை எங்கே வைப்பது என்ற டென்ஷன் இனி வேண்டாம். இந்த பாத்திரம் வைக்கும் மேட் இருந்தால் கிச்சன் வேலை இன்னும் ஈஸி.

1111
வெஜிடபிள் சாப்பர் Vegetable Chopper)
Image Credit : pinterest

வெஜிடபிள் சாப்பர் Vegetable Chopper)

காய்கறி நறுக்குற வேலை கஷ்டமா? இனி நிமிஷத்துல ஈஸியா முடிச்சிடலாம். வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் என ஒவ்வொரு காய்கறியாக கத்தியை வைத்து நீண்ட நேரம் நறுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் சமையலறையில் ஒரு வெஜிடபிள் சாப்பர் இருந்தாலே போதும்.

காய்கறிகளை சாப்பரில் போட்டு இயக்கினால், அவை விரைவாக பொடியாக நறுக்கி கொடுக்கும். குறிப்பாக தினமும் சமையல் செய்யும் இல்லத்தரசிகளுக்கு, நேரத்தையும், உழைப்பையும் குறைக்க உதவும் ஒரு பயனுள்ள சமையலறை சாதனம் இது.

வெஜிடபிள் சாப்பர் வாங்கப் போறீங்களா? அதன் கொள்ளளவு (Container Capacity), கத்தியின் தரம் (Blade Quality), பயன்படுத்தப்படும் மெட்டீரியல் (Material), சுத்தம் செய்வது எளிதா, பிடிப்பு வசதி (Grip) உள்ளிட்ட அம்சங்களைப் பார்த்து தேர்வு செய்யுங்கள். சமையலறையில் சின்ன சாதனம். ஆனால் தினசரி வேலையை பெரிய அளவில் ஈஸியாக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சமையலறை குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vessel Cleaning : கருகிய பாத்திரத்தை பளிச்சுன்னு சுத்தம் செய்ய 7 சூப்பர் வழிகள்! இந்த பொருட்கள் போதும்!
Recommended image2
D-Mart-க்கு போறீங்களா? இந்த 5 பொருட்களை மட்டும் லிஸ்ட்டில் சேர்க்காதீங்க!
Recommended image3
கொலஸ்ட்ராலை குறைக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்
Related Stories
Recommended image1
Kitchen Gadgets: காசுக்கு வேட்டு வைக்கும் 7 கிச்சன் பொருட்கள்... இதெல்லாம் வாங்காதீங்க பாஸ்!
Recommended image2
Kitchen Gadgets : வெறும் ரூ.150-தான்! ஆனா, கிச்சன் வேலையை ஈஸியாக்கும் 6 பொருட்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved