- Home
- குற்றம்
- கணவரை பிரிந்து வாழ்ந்த சந்தியா! வீடு புகுந்த அத்தை மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கணவரை பிரிந்து வாழ்ந்த சந்தியா! வீடு புகுந்த அத்தை மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த சந்தியா என்ற பெண், அவரது அத்தை மகன் ஜனார்த்தனனுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜனார்த்தனன் சந்தியாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் அடுத்துள்ள அரேனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தியா. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவுக்கும் அவரது அத்தை மகன் ஜனார்த்தனனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடர்ந்து தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சந்தியா காணாமல் போயிருந்தார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காணாமல் போன சந்தியா மீண்டும் வீடு திரும்பினார். அவர் வீட்டிற்கு வந்த மறுநாளே திடீரென ஜனார்த்தனன் வீடு புகுந்து சந்தியாவை கடுமையாக தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தி கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜனார்த்தனனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

