அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. காதலனுடன் பைக் ரைட் போன இளம்பெண்.. 10 காமக்கொடூரர்களால் கூட்டு பலாத்காரம்.!
காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் உள்ள படேர்கோலா கிராமத்தில் தனது காதலனுடன் 26 இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வழிமறித்தது. பின்னர், அவரது காதலனை அந்த கும்பல் கடுமையாக தாக்கி விட்டு இளம்பெண்ணை தூக்கி சென்று மாறி மாறி கதற கதற பலாத்காரம் செய்தனர்.
மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் இளம்பெண் உயிரிழந்ததாக நினைத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. இதனையடுத்து, மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கதறியபடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க;- உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்கிற வேலையை பாத்தீங்களா.. அலேக்கா தூக்கிய போலீஸ்.!
இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி முனையில் 10 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- நெல்லையில் இளைஞர் ஆவணக் கொலையா? உண்மை நிலவரம் என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்..!