மாரி குறித்து கார்த்திக்கு தெரியவரும் தகவல்.. நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Zee tamil Karthigai Deepam 2: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம் 2' சீரியலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதிக்கு உரிய நேரத்தில் இரத்தம் கொடுக்கப்படுமா என்பது பற்றி பார்க்கலாம்.

ரேவதிக்காக நடக்கும் அன்னதானம்:
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், சிவனாண்டி மற்றும் முத்துவேல் இணைந்து ரேவதிக்கு ரத்தம் கிடைக்க கூடாது என திட்டமிட்டு மாரியை கடத்திய நிலையில், மருத்துவமனையில் ரேவதியின் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். ரேவதி உடல்நிலை நலம்பெற வேண்டு என்பதற்காக ஆசிரமத்தில் அன்னதானம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
கார்த்திக்கு தெரியவரும் தகவல்:
இதனை தொடர்ந்து மறுபக்கம் மாரியின் செல் போன் கீழே விழுந்து விட, கார்த்திக் அந்த நம்பருக்கு போன் செய்ய அந்த வழியாக வந்த இரண்டு முருக பக்தர்கள் போனை எடுத்து பேசுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் கொடுத்த முகவரியை வைத்து கார்த்திக் மாரி கடத்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர்கிறான்.
கனவு நினைவானது... புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் சீரியல் ஹீரோ! குவியும் வாழ்த்து!
ரேவதி உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம்:
பிறகு பரமேஸ்வரி பாட்டி, கோவிலில் ஏதாவது வேண்டிக் கொண்டு தீச்சட்டி எடுக்க முடிவெடுக்க... துர்கா அக்காவுக்காக நானும் இருக்கிறேன் என்று தீச்சட்டி எடுக்க ரோகிணி ரேவதிக்காக நானும் எடுக்கிறேன் என்று கலந்து கொள்கிறாள். மறுபக்கம் ரேவதியின் உடல் நிலையை சிறு முன்னேற்றம் ஏற்பட அதை பார்த்து சாமுண்டீஸ்வரி சந்தோஷப்படுகிறாள்.
விஜய்க்கு போட்டியாக DVK என்கிற கட்சி தொடங்குகிறாரா பிக்பாஸ் அபிராமி? வைரலாகும் புகைப்படம்!
மாரி காப்பாற்றப்படுவாளா?
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? மாரியை சிவணாண்டியிடம் இருந்து காப்பாற்றி, ரேவதியின் உயிரை கார்த்திக் காப்பாற்றுவானா? என பல்வேறு பரபரப்பான காட்சிகளுக்கு மத்தியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.