கனவு நினைவானது... புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் சீரியல் ஹீரோ! குவியும் வாழ்த்து!
Serial Actor Puviarasu: ஜீ தமிழ் சீரியல் ஹீரோ புவியரசு, தனது கனவு நினைவானதாக கூறி புதிய கார் வாங்கிய தகவலை அறிவித்துள்ளார். அவர் என்ன கார் வாங்கியிருக்கிறார், காரின் விலை எவ்வளவு என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புவியரசு கூறிய தகவல்:
முன்னணி தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் ஹீரோக்கள் பெரும்பாலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்கள். எனவே தங்களின் மகிழ்ச்சி மற்றும் சோகமான விஷயங்களை ரசிகர்களிடம் நேரடியாகவே பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது, ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் புவியரசு மகிழ்ச்சியான தகவலை அறிவித்துள்ளார்.
பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்ணுறது? ஐடியா கேட்டு மொக்கை வாங்கிய வெற்றி – கெட்டிமேளம் சீரியல்!
ஜீ தமிழ் சீரியல் ஹீரோ:
ஒரு டான்சராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரையில் ஹீரோவாக கால்பதித்தவர் தான் புவியரசு. இவர் முதல் முதலில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான அழகிய தமிழ் மகள் சீரியலில் தான் நடித்தார். முதல் சீரியலிலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் பல இளம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து வித்தியா நம்பர் 1 என்கிற தொடரிலும், இதயம் தொடரிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவி பக்கம் வந்த புவியரசு:
நடிப்பு மற்றும் நடனத்தை தாண்டி, புவியரசு ஒரு பாக்ஸர் என்பது பலரும் அறிந்திடாத தகவல். பல வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த புவியரசு, மிஸ்டர் அண்ட் மிஸாஸ் சின்னத்திரை மூலம் விஜய் டிவி பக்கம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி பிரியாவுடன் சேர்ந்து புவியரசு நடனம் ஆடினார்.
புதிய கார் வாங்கிய புவியரசு:
இந்த நிலையில் தான் தன்னுடைய புதிய பயணம் துவங்குவதாகவும், தன்னுடைய கனவு நனவாகி விட்டதாகவும் கூறி, குடும்பத்துடன் சென்று கார் வாங்கிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். eco-friendly MG EV Windsor என்கிற காரை தான் புவியரசு வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.