Zee Tamil Getti Melam Serial Today September 25th Episode : தன்னுடைய மனைவியை கரெக்ட் பண்ண தெரியாமல் ஐடியா கேட்டு கடைசியில் மொக்கை வாங்கிய வெற்றி என்ன செய்தார் என்பது பற்றி பார்க்கலாம்.
கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோடு
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கெட்டிமேளம். தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவராமன் உயிரோடு இல்லை என்று தெரிந்து குடும்பத்தினர் உடைந்து போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, வெற்றி துளசி வீட்டுக்கு வர அபிராமி வழக்கம் போல என்ன வீடா? சத்திரமா? உன் இஷ்டத்துக்கு வர, போற என்று கோபப்படுகிறாள். ஒழுங்கா இந்த வீட்டு மருமகளா நடந்துக்கோ என்று சொல்ல வெற்றி ஒரு நேரம் அவங்கள இந்த வீட்டு மருமகளே இல்லைன்னு சொல்றீங்க இப்போ இந்த வீட்டு மருமகளா நடந்துக்கோனு சொல்றீங்க உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா என்று கேள்வி கேட்கிறான்.
பிறகு ரூமுக்கு வந்ததும் துளசியிடம் நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க அம்மா உங்கள பத்தி புரிஞ்சிக்கும் போது கண்டிப்பா வருத்தப்படுவாங்க என்று ஆறுதல் சொல்லி தோள் மீது கை வைக்க போக துளசி தள்ளி நிற்கிறாள். உங்களுக்கு என்னுடைய காதல் புரியலையா என்று வெற்றி கேட்க நீங்க ஒரு நல்ல மனுஷன் என்பதை புரிஞ்சுகிட்டேன் ஆனா ஒரு பொண்ணோட மனசுல இடம் பிடிக்கிற அளவுக்கு இங்கு இன்னும் மாறல என்று பதிலடி கொடுக்கிறாள்.
அதன் பிறகு வெற்றி தன்னுடைய அண்ணனிடம் ஒரு பொண்ணு எப்படி டா கரெக்ட் பண்றது என்று ஐடியா கேட்கிறான். அவன் பொண்ணு யாரு என்று கேட்க வெற்றி வேற யாரு என் பொண்டாட்டி தான் என்று பதில் கொடுக்கிறான். பிறகு அவனது அண்ணனும் சில ஐடியாக்களை கொடுக்கிறான்.
மறுநாள் காலையில் எல்லோருக்கும் முன்பாக எழுந்து வெற்றி பூஜை செய்து காபி போட்டு கொடுத்து துளசி எழுந்து கொள்ளும் போது இந்தாங்க மேடம் காபி என்று கையில் கொடுக்கிறான். வெற்றி ஓடி ஓடி வேலை செய்வதை பார்த்த துளசி அவனை கூப்பிட்டு இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு அப்பட்டமா தெரியுது. இப்படி எல்லாம் பண்ணாதீங்க டோட்டல் டைம் வேஸ்ட் என்று சொல்லவே இதுவரை பண்ண எல்லாமே வேஸ்டா என்று மொக்கை வாங்கிய நிலையில் பரிதாபமாக நிற்கிறார்.
அடுத்ததாக துளசி ஆபீசுக்கு நடந்து செல்ல அவளை பின்தொடர்ந்து வரும் வெற்றி ஒரு இடத்தில் நிறுத்தி கண்ணை மூடி காதலை சொல்லி கையில் இருக்கும் ரோஜாக்களை கொடுத்து கண் திறந்து பார்க்க அங்கு ஒரு பாட்டி நிற்பதை பார்த்து ஷாக்காகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து கெட்டிமேளம் சீரியலை பார்க்கலாம்.
