- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தனிக்குடித்தனம் செல்ல டிராமா பண்ணும் செந்தில் – மீனாவை வழிக்கு கொண்டு வர பிளான் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
தனிக்குடித்தனம் செல்ல டிராமா பண்ணும் செந்தில் – மீனாவை வழிக்கு கொண்டு வர பிளான் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Senthil creates drama : பாண்டியனின் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசு கொடுக்கும் விடுதியை பெற்றுக் கொண்டு தனிக்குடித்தனம் செல்லும் பிளானில் செந்தில் மீனாவை வற்புறுத்துகிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. அப்படி இன்றைய 595ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். முதலில் பாண்டியன் வரவு செலவு கணக்கை பார்க்கையில் செலவை விட வரவு கம்மியாகவே வந்திருக்கிறது என்று ஃபீல் பண்ணுகிறார். பின்னர் பழனிவேலுவை குடோனுக்கும், சரவணனை வங்கி வேலையை முடிக்க அனுப்பி வைக்கிறார்.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுகன்யா தனது கணவர் பழனிவேலுவிடம் சென்று சண்டையிடுகிறார். உங்களுக்கு ஒரு நியாயம், அவருடைய மகனுக்கு ஒரு நியாயமா? ஏன் வேலையை பிரித்துக் கொடுக்க வேண்டியது தானே என்கிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சரவணன், பழனிவேலுவிடம் கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று மலுப்பிவிடுகிறார்.
டிராவல்ஸிற்கு புக்கிங் செய்த ராஜீ
அடுத்ததாக, ராஜீ பாண்டியன் டிராவல்ஸிற்கு புக்கிங் வருவதை கன்பார்ம் செய்து டிரைவரை அனுப்பி வைக்கிறார். ராஜீயை நினைத்து பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் பெருமிதம் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து மீனா மற்றும் செந்தில் இருவரும் பேசிக் கொள்கின்றனர். வேலை முடிந்து வந்த மீனாவிடம், செந்தில் ஏன் இவ்வளவு நேரம், ஆடிட்டிங் முடிந்ததா என்றெல்லாம் கேட்க, அதற்கு முடிந்தது.
செந்தில் மற்றும் மீனா
முன்பை விட இப்போது கூடுதலாக வேலை கொடுத்துவிட்டார்கள். அதோடு அரசு வேலை பார்ப்பவர்களுக்கு அரசு விடுதியும் உண்டு. அதைப் பற்றி என்னிடம் கேட்டார்கள் என்றார். அதற்கு செந்திலோ அப்படியே வாங்கிக் கொள். நாம் அங்கு சென்றுவிடலாம் என்று சொல்ல, மீனாவோ அதெல்லாம் வேண்டாம் என்றார். பதிலுக்கு நமக்கு தேவையில்லை என்றாலும் கூட பழனி மாமா அங்கு செல்வார் என்றார்.
ரோபோ ஷங்கரின் கடைசி ஆசையை நிறைவேற்ற கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு! பாராட்டும் ரசிகர்கள்!
சரவணன் பிடிவாதம்
அப்படி அவர்கள் செல்லவில்லை என்றால் நாம் போகலாம். நமக்கு கொஞ்சம் பிரைவேசி வேண்டும். வாரத்திற்கு ஓரிரு நாட்கள் அங்கிருந்து வேலைக்கு செல்லலாம் என்றார். ஆனால், மீனா கேட்பதாக தெரியவில்லை. வேறு, வழியில்லாமல் மீனா யார் சொன்னா கேட்பாளோ அங்கு வந்து அவர்களிடம் இதைப் பற்றி சொன்னார். மீனாவின் அப்பாவோ இதைப் பற்றி மீனாவிடம் கேட்பதாக கூறினார்.
மேக்ஸ் இயக்குநருக்கு காஸ்ட்லி காரை பரிசாக கொடுத்த நடிகர் கிச்சா சுதீப்!
பாண்டியன் பெருமிதம்
யாராக இருந்தாலும் தன்னுடைய பொண்ணு சந்தோஷமாக மாப்பிள்ளையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இங்கு என்னடானா, மாப்பிள்ளையே தனிக்குடித்தனம் போகலாம் என்று கேட்க அதற்கு முடியாது என்கிறாரே என்றார். இறுதியாக தனது அப்பாவிடம் சென்று கடைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று தங்கமயில் கூற வந்த நிலையில் தனது அம்மா மற்றவர்களிடம் பணம் வாங்கிவிட்டு அதனை திருப்பி தராமல் இழுத்தடித்த நிலையில் பணம் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து திட்டிக் தீர்த்த நிலையில் அதனை மயில் பார்த்துவிடுகிறார்.
தங்கமயில் வருத்தம்
மேலும், பணம் கொடுத்தவர் பணத்தை தரவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிவடைந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.