- Home
- Cinema
- விஜய்க்கு போட்டியாக DVK என்கிற கட்சி தொடங்குகிறாரா பிக்பாஸ் அபிராமி? வைரலாகும் புகைப்படம்!
விஜய்க்கு போட்டியாக DVK என்கிற கட்சி தொடங்குகிறாரா பிக்பாஸ் அபிராமி? வைரலாகும் புகைப்படம்!
Bigg Boss Abhirami: நடிகையும் - மாடலுமான பிக்பாஸ் அபிராமி, DVK என்னும் கட்சியை துவங்கியுள்ளாரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு ஒற்றை புகைப்படம்.

அஜித்துடன் நடித்த அபிராமி:
ஒரு மாடலாக தன்னுடைய கரியரை துவங்கியவர் தான் அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்ததால்... அப்படியே சினிமா பட வாய்ப்புகளை தேடத்துவங்கினார். நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'நோட்டா' திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதன் பின்னர் அபிராமிக்கு, இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில்... அஜித்குமார் நடிப்பில் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்ட 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்:
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, 'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அபிராமிக்கு திரைப்படங்கள் மூலம் கிடைக்காத பிரபலத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்தது. அதே நேரம் பிக்பாஸ் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே, கவினுக்கு காதல் புரபோஸ் செய்து சர்ச்சையில் சிக்கினார். அதே போல் முகேன் ராவையும் காதலிப்பதாக கூறினார். காதல் கன்டென்ட் கொடுத்து விளையாட வேண்டும் என அபிராமி முயற்சி செய்த போதும் அவரது முயற்சிகள் தோல்வியை சந்தித்தது.
பிக்பாஸ் அல்டிமென்ட் நிகழ்ச்சி:
பிக்பாஸ் வீட்டை விட்டு 56-ஆவது நாளில் அபிராமி வெளியேறிய நிலையில்... தொடர்ந்து ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 100 நாட்கள் நிலையாக விளையாடி... 5-ஆவது ரன்னரப்பாக மாறினார்.
சீரியல் பக்கம் சென்ற அபிராமி:
திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நினைத்தேன் வந்தாய்' சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து, வெப் சீரிஸ் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தான், நடிகர் அபிராமி விஜய்க்கு எதிராக அரசியல் கட்சி துவங்கினாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது வைரலாகி வரும் புகைப்படம்.
விஜய்க்கு போட்டியாக கட்சி துவங்குகிறாரா?
"திராவிட வெற்றிக் கழகம்" (DVK ) என்று கட்சி பெயர் பொறிக்கப்பட்ட ஒரு போஸ்டரில், அபிராமி அரசியல் தலைவி போல வெள்ளை நிற சேலையில் உள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் சிலர் நீங்கள் அரசியல் கட்சி துவங்குகிறீர்களா என ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருவது மட்டும் இன்றி, இன்னும் சிலர் இது நீங்கள் நடிக்கும் திரைப்படமா அல்லது வெப் தொடரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அபிராமி இதுகுறித்து என்ன பதில் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.