மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சினேகா..! சல்வார் அழகில் புன்னகை பூப்போல் துள்ளலான எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்!
நடிகை சினேகா மஞ்சள் நிற சல்வார் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழில் 'என்னவளே' படத்தில் அறிமுகமானதிலிருந்து, இப்போது வரை ரசிகர்களை தன்னுடைய அழகால் வசீகரித்து வருபவர் சினேகா. புன்னகை அரசி என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரியான இவர், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவ்வபோது தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக போட்டோஷூட் புகைப்படங்கள் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சினேகா, தற்போது மஞ்சள் நிற சல்வாரில் அழகு ததும்பும் தேவதை போல் வெளியிட்டுள்ள புகைப்படம். ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு திருஷ்டி சுத்தி போட வேண்டும் என்றும், திருமணத்திற்கு பின் இப்படி அழகை பராமரிப்பது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் அதனை சாமர்த்தியமாக செய்து வருகிறார் சினேகா என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
குழந்தை பெற்ற பின் சற்று உடல் எடை கூடிய சினேகா, தற்போது மீண்டும் கணிசமாக உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருக்கிறார்.
தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்த பின் திரைப்படங்களில் எதுவும் நடிக்காமல் உள்ள சினேகா மீண்டும் விரைவில் நடிக்க நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது கணவருடனான விவாகரத்து வதந்தியில் சிக்கியுள்ள சினேகா அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் கணவர் குழந்தைகளுடன் தன்னுடைய நேரத்தில் செலவிட்டு வருகிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களா அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.