முகமெல்லாம் ஊதி போய்.. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அப்பாஸ்..! என்ன ஆச்சு?
நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அப்பாஸ். 90களில் அதிக பெண் ரசிகைகள் மனதைக் கவர்ந்த இவர், சாக்லேட் பாய் என்கிற இமேஜுக்கு சொந்தக்காரர். இந்த இமேஜை உடைப்பதற்காக சில வில்லத்தமனான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்த போதும், தற்போது வரை ஹான்சம் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார்.
அழகும், திறமையும் இருந்தும் கூட, இவரால் தமிழ் சினிமாவில்... நிலையான இடத்தை பிடிக்க முடியாததால், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
சினிமாவில் நடிக்க வில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அப்பாஸ், தற்போது முகம் ஊதி போய்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அப்பாஸ் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய கால் முட்டியில் ஒரு சிறு இஞ்சூரி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அக்டோபர் மாதம் தன்னுடைய முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறி, தன்னுடைய வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது இவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து மருத்துவமனைகள் இருக்கும்போது மிகவும் பதட்டமாகிவிட்டேன், ஆனால் என்னோட பயத்தை எப்படியோ முயற்சி செய்து கட்டுப்படுத்தினேன். என்னுடைய மனதிற்கு நானே தைரியத்தை கொடுத்துக் கொண்டேன். விரைவில் வீட்டிற்கு சென்று விடுவேன் எல்லாருடைய பிரார்த்தனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி என தன்னுடைய காலில் நடந்த அறுவை சிகிச்சை குறித்து எமோஷ்னலாக பதிவு போட்டுள்ளார். மேலும் ரசிகர்களும் விரைவில் குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.