மீண்டும் கமலிடம் சிக்கிய அசீம்! தகுதியே இல்லாத படைத்தளபதி! குற்றங்களை அடுக்கிய போட்டியாளர்கள்! புரோமோ.!

பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்த 'அரண்மனை' டாஸ்கில், அசீமை குறிவைத்து போட்டியாளர்கள் அசிங்கப்படுத்தும் புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
 

biggboss 6 tamil today 2nd promo released

கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு, அரண்மனையாகவும், அருங்காட்சியகமாகவும் மாறியது. அரண்மனையில் இருப்பது போலவே, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணி, படைத்தளபதி, மந்திரி, என மாறி போட்டி போட்டு கொண்டு தங்களுடைய பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம், பிரச்சனைகளும் பற்றி கொண்டு எரிந்தது.

குறிப்பாக ராஜாவாக இருந்த ராபர்ட் மாஸ்டர், ராணி ரக்ஷிதாவிடம் அத்து மீறி நடந்து கொண்டதால், ஒரு நிலையில் அவர் கடுப்பாகி கோபத்தை வெளிப்படுத்தியதில், வெளியே வந்து அழுது ட்ராமா போட்டது, ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது. 

இது நம்ப லிஸ்டுலையே இல்லையே.! மீண்டும் மன்மதனாக மாறும் சிம்பு? இரண்டாம் பாகத்திற்கு பக்கா பிளான் போட்ட STR!

biggboss 6 tamil today 2nd promo released

இதை தொடர்ந்து இன்று கமல் போட்டியாளர்களின் குற்றங்களை தட்டி கேட்க வந்துள்ளார். முதல் புரோமோவிலேயே உப்பு பிரச்சனை பற்றி பேசிய கமல், இரண்டாவது புரோமோவில், அரண்மனை டாஸ்கில் யார் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தகுதி இல்லாதது போல் நடந்து கொண்டார் என கேள்வி கேட்கிறார். இதற்க்கு, விக்ரமன், தனலட்சுமி, ஏடிகே, ஆயிஷா ஆகிய நால்வருமே அசீமின் பெயரை கூறியது அசீமுக்கே ஆச்சர்யமாக உள்ளது. எனவே இந்த முறை அசீம் செய்தது குறித்து கண்டிப்பாக கமல் வெளுத்து வாங்குவார் என்பது இந்த புரோமோவின் மூலமே தெரிகிறது.

Kalaga Thalaivan: உதயநிதி நடிப்பில் வெளியான 'கலகத் தலைவன்' படத்தின் முதல் நாள் வசூல்..! இத்தனை கோடியா?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios