இது நம்ப லிஸ்டுலையே இல்லையே.! மீண்டும் மன்மதனாக மாறும் சிம்பு? இரண்டாம் பாகத்திற்கு பக்கா பிளான் போட்ட STR!
நடிகர் சிம்பு விரைவில் 'மன்மதன் 2' படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று.. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் 'மன்மதன்'. சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தை ஏஜே முருகன், கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருந்தார். 'இந்தியன் தியேட்டர் ப்ரொடக்ஷன்' நிறுவனம் 'மன்மதன்' படத்தை தயாரித்திருந்தது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் சாதனை செய்தது.
சிம்பு மதன்குமார், மதன்ராஜ் என்கிற இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில்... சிந்து துலானி, கவுண்டமணி, அட்டுல் குல்கர்னி, சந்தானம், சத்யன், மயூரி, டிபி கஜேந்திரன், மந்த்ரா பேடி,போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. 'மன்மதன்' திரைப்படம் வெளியாகி18 வருடங்கள் ஆகும் நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
simbu
ஆனால் இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் சிம்பு இது குறித்து அறிவிக்க உள்ளதாகவும், மன்மதன் திரைப்படம் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், 'மன்மதன் 2' பான் இந்தியா படமாக உருவாக வாய்ப்புள்ளகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாகவும் 2024 ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'மன்மதன் 2 'படம் குறித்து வெளியாகி உள்ள தகவல் சிம்பு ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.