அமீர் கான் மகளுக்கு மிக பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்..! நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய அக்ஷரா ஹாசன்!
பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கானின் மகள் இரா கானுக்கும், அவருடைய காதலருக்கும் நேற்று மிகப் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
நடிகர் அமீர் கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். தற்போது இரா கானுக்கும்... அவருடைய காதலருக்கும் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா, நுபுர் ஷிக்கரே என்பவரை காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன், இந்த திருமண நிச்சயதார்த்தம் தற்போது பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
Nikki Galrani Pregnant: கர்ப்பமாக இருக்கிறேனா..? உண்மையை போட்டுடைத்த நிக்கி கல்ராணி..!
இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதே போல் கடந்த ஆண்டு அமீர் கானிடம் இருந்து விவாகரத்து பெற்ற, அமீர் கானின் இரண்டாவது மனைவியான கிரண் ராவும் கலந்து கொண்டுள்ளார். இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவ்வப்போது பிறந்தநாள் பார்ட்டி, குடும்ப விசேஷங்களில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இரா மற்றும் நுபுர் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும், அவரை காதலிக்க துவங்கிய பின்பு அவ்வப்போது... இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இரா கான்.
சமீபத்தில் நடந்து முடிந்த இராவின் பிறந்தநாள் பார்ட்டியில் தன்னுடைய காதலருடன் காதலர் மற்றும் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகியது.
காதல் பிரேக் அப் ஆன மாதிரி கதறி அழும் ராபர்ட் மாஸ்டர்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
அதே போல் சைக்கிளின் வீரரான நுபுர் போட்டியில் கலந்து கொண்ட பின் இராவுக்கு முத்தம் கொடுத்து, அவருக்கு மோதிரம் மாற்றிய புகைப்படம் மிகவும் வைரலானது. இதை தொடர்ந்து இன்று இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அமீர் கானின் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய வாழ்த்துக்களை இரா மற்றும் நுபுர் ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.