MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Yash Next Movie : டாக்ஸிக் டிசாஸ்டருக்கு பின் புதுமுக இயக்குநருடன் கூட்டணி... யாஷின் அடுத்த படம் இவருடனா?

Yash Next Movie : டாக்ஸிக் டிசாஸ்டருக்கு பின் புதுமுக இயக்குநருடன் கூட்டணி... யாஷின் அடுத்த படம் இவருடனா?

Yash Next Movie : யாஷின் அடுத்த படம் பற்றிய சூடான விவாதம் தொடங்கியுள்ளது. புதுமுக இயக்குநருடன் இணைந்து ராக்கி பாய் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படம் பண்ணப்போவதாக செய்திகள் பறக்கின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 10 2026, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
'ராக்கி பாய்' யாஷின் அடுத்த படம் என்ன?
Image Credit : Facebook

'ராக்கி பாய்' யாஷின் அடுத்த படம் என்ன?

'கே.ஜி.எஃப்' சீரிஸ் மூலம் பான் இந்தியா லெவலில் மாஸ் காட்டிய யாஷின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், டோலிவுட்டின் இளம் இயக்குநர் ஒருவருடன் யாஷ் கைகோர்க்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது.

'கே.ஜி.எஃப்' படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட கதைகளைக் கேட்ட யாஷ், கடைசியாக கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' படத்தை ஓகே செய்தார். இந்தப் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே, தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு யாஷ் எந்த இயக்குநரை டிக் அடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போது, புதுமுக இயக்குநர் ஒருவருடன் யாஷ் இணையப் போவதாக ஒரு தகவல் உலா வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
யாஷின் அடுத்த படம்... சூடுபிடிக்கும் விவாதம்!
Image Credit : Facebook

யாஷின் அடுத்த படம்... சூடுபிடிக்கும் விவாதம்!

'கே.ஜி.எஃப்' மெகா ஹிட்டுக்குப் பிறகு, தனது அடுத்த படத்துக்காக யாஷ் நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார். இப்போது புதிய ப்ராஜெக்ட்கள் மீது கவனம் செலுத்தி வரும் அவர், மீண்டும் ஒரு பான் இந்தியா படம் மூலம் ரசிகர்களைச் சந்திக்க ரெடியாகி வருகிறாரா என்ற ஆர்வம் எகிறியுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்படி, 'டேவிட் ரெட்டி' பட இயக்குநர் ஹனுமா ரெட்டி யக்கண்டி சமீபத்தில் யாஷிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இந்தக் கதை ராக்கி பாய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். இதனால், இவர்கள் இருவர் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகப் போவதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இதுபற்றி யாஷ் தரப்பிலிருந்தோ அல்லது இயக்குநர் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

35
'ராமாயணா'வில் ராவணனாக மிரட்டும் யாஷ்
Image Credit : Others

'ராமாயணா'வில் ராவணனாக மிரட்டும் யாஷ்

இன்னொரு பக்கம், இந்திய சினிமாவிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான 'ராமாயணா'வில் யாஷ் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். நிதேஷ் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் அவர் ராவணனாக நடிக்கிறார். நடிப்பது மட்டுமில்லாமல், இந்தப் படத்தின் தயாரிப்பிலும் யாஷ் ஒரு பார்ட்னராக இருக்கிறார்.

இதுதவிர, கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' படத்திலும் தயாரிப்புப் பொறுப்பை யாஷ் கையில் எடுத்துள்ளார். இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. யாஷின் அடுத்த படத் தேர்வு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் வெயிட்டிங்.

45
யார் இந்த ஹனுமா ரெட்டி?
Image Credit : X

யார் இந்த ஹனுமா ரெட்டி?

யாஷுடன் இணையப் போவதாகச் சொல்லப்படும் ஹனுமா ரெட்டி யக்கண்டி, நடிகர் மஞ்சு மனோஜ் நடிக்கும் 'டேவிட் ரெட்டி' படத்தின் இயக்குநர் ஆவார். இதுதான் அவர் இயக்கும் முதல் படம் என்றாலும், இப்போதே இண்டஸ்ட்ரியில் நல்ல கவனம் ஈர்த்துள்ளார். 'டேவிட் ரெட்டி' படத்தில் மஞ்சு மனோஜுடன் சமுத்திரக்கனி, ரம்யா கிருஷ்ணன் போன்ற சீனியர் நடிகர்களும் நடிக்கிறார்கள்.

கே.ஜி.எஃப் புகழ் ரவி பஸ்ரூர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆச்சார்யா வேணு ஒளிப்பதிவு செய்ய, ஆக்‌ஷன் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைக்கிறார். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட் மற்றும் அனுபவமிக்க டெக்னீஷியன்களுடன் வேலை பார்க்கும் ஹனுமா ரெட்டி, 'டேவிட் ரெட்டி' மூலம் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
நிஜமாகுமா யாஷ் - ஹனுமா ரெட்டி காம்போ?
Image Credit : X

நிஜமாகுமா யாஷ் - ஹனுமா ரெட்டி காம்போ?

ஒருபக்கம் 'ராமாயணா' போன்ற பிரம்மாண்ட ப்ராஜெக்ட், மறுபக்கம் 'டாக்ஸிக்' படத்தின் எதிர்பார்ப்புகள்... இதற்கிடையே யாஷின் அடுத்த படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்ற ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில்தான் ஹனுமா ரெட்டி யக்கண்டியுடனான புதிய ப்ராஜெக்ட் பற்றிய செய்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால், இப்போதைக்கு இது சினிமா வட்டாரத்தில் அடிபடும் ஒரு செய்தி மட்டும்தான். யாஷோ அல்லது ஹனுமா ரெட்டியோ இந்தக் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் கொடுக்கவில்லை. அதனால், 'ராக்கி பாயின்' அடுத்த படம் டோலிவுட் இயக்குநருடன் தானா என்பதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் விடை கிடைக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Rocking Star Yash: யஷ் குளோபல் ஸ்டார் ஆன கதை! இதன் பின்னணியில் உள்ள ஒரு 'மகா மந்திரம்'!
Recommended image2
Yash Ramayana: 100 கோடி சம்பளத்தை வேண்டாம்னு சொன்ன யாஷ்! காரணம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved