கோப்ரா ஆடியோ லான்ச்-ல் கலந்து கொள்வாரா விக்ரம்? சீயான் உடல் நிலை குறித்த அப்டேட்..
கோப்ரா நிகழ்ச்சியில் விக்ரமால் கலந்து கொள்ள இயலாது என பேசப்பட்டது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவலாக இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Vikram
கடந்த எட்டாம் தேதி மதியம் திடீரென விக்ரமுக்கு நெஞ்சு வலியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது இதை அடுத்து இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனையில் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.
மேலும் செய்திகளுக்கு..நயன் - விக்கி திருமணத்திற்கு மேட்சிங்... மேட்சிங்.. உடையில் வந்து அசத்திய சூர்யா - ஜோதிகா!! செம்ம கியூட்...
பின்னர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்தார். அவர் சமூக வலைதளத்தில், "விக்ரமுக்கு சாதாரண நெஞ்சு வலி மட்டுமே ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளதாகவும், சியான் உடல் நலம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
Vikram
பின்னர் நடிகருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவலும் வெளியானது. மருத்துவமனை வெளியிட்டு இருந்த அறிக்கையில் லேசான நெஞ்சு வலி காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் விக்ரம் உடல்நிலை குறித்த உண்மை தகவல் முறையாக வெளியிடப்படவில்லை என்ற புகாரும் எழுந்தது.
மேலும் செய்திகளுக்கு..தமிழர்கள் என்ன பெரியாளா? தடாலடியாக டீசர் விழாவில் பேசிய கார்த்தி!
தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள விக்ரம், தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளதாக சிறிய வீடியோ ஒன்று உலா வருகிறது. அதன் உண்மை தன்மை இன்னும் வெளியாகவில்லை.
Vikram
இந்நிலையில் சீயான் விக்ரம் நலமுடன் வீடு திரும்பியுள்ளதால், இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா ஆடியோ லான்ச் வருகிற திங்கள்கிழமை நடைபெற உள்ளது. ஏற்கனவே, மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் சியான் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். இது குறித்தான போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் திடீர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் செய்திகளுக்கு..குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..
Vikram
இதையடுத்து அடுத்ததாக நடைபெறும் கோப்ரா நிகழ்ச்சியில் விக்ரமால் கலந்து கொள்ள இயலாது என பேசப்பட்டது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவலாக இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்வீட் செய்ததாவது: " கோப்ரா ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 11-ம் தேதி சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் சியான் விக்ரம் முன்னிலையில் நடைபெறும் அங்கு அனைவரையும் சந்திப்போம். என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.