இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் முதல் விஜய்சேதுபதி வரை.. நயன் - விக்கி வெட்டிங் அசத்தல் க்ளிக்ஸ்!
தற்போது வைரலாகி வரும் நயன்- விக்கி திருமண புகைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்...
nayanthara vignesh shivan wedding
கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்தான புகைப்படங்கள் ஒரு மாதம் கழித்து தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. 7 ஆண்டு காதல் பந்தத்தில் இருந்த நயன் -விக்கி கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மணவறையில் கரம் பிடித்தனர்.இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
nayanthara vignesh shivan wedding
இந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட னர்.நயன்தாரா இதுவரை முன்னணி நாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்திரு விட்டார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்துமொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த இவரின் திருமணத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்திருந்தன.
மேலும் செய்திகளுக்கு.. விக்ரம், தர்பார், கைதி என 'போதை பொருளை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய 10 தமிழ் படங்கள்.!
அதன்படி தற்போது வைரலாகி வரும் நயன்- விக்கி திருமண புகைப்படங்க குறித்து இங்கு பார்க்கலாம்...
Nayanthara Vignesh shivan wedding
சூப்பர் ஸ்டார் தாலி எடுத்து கொடுக்க பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற இத்திருமணத்திலிருந்து ரஜினி பரிசு பெட்டகம் கொடுக்கும் புகைப்படம் தான் இது.
ரஜினி - நயன்தார.. சந்திரமுகி, தர்பார், அண்ணாத்தே உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தனர். முன்னதாக சிவாஜி படத்தில் அறிமுக பாடலுக்கு நயன்தாரா நடனமாடியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு.. நான்கு நடிகர்கள் நடிப்பில் முழு நீல தில்லைராக உருவாகும் 'விடியும் வரை காத்திரு'!!
nayanthara vignesh shivan wedding
எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, ஷாருக்கான், இயக்குனர் அட்லி என பிரபலங்கள் நயன் விக்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்... பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார்.
மேலும் செய்திகளுக்கு.. ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !
nayanthara vignesh shivan wedding
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நட்சத்திர தம்பதிகளான சூர்யா, ஜோதிகா வருகை தந்து வாழ்த்தி இருந்தனர். சூர்யாவும், நயன்தாராவும் ஆதவன், மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.
nayanthara vignesh shivan wedding
விஜய் சேதுபதியின் மனைவி ஜெசியுடன் தம்பதிகளாக வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். முன்னதாக நயன் -விக்கி காதல் மலர காரணமான நானும் ரவுடி தான் படத்திலும் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் இணைந்திருந்தனர்.
nayanthara vignesh shivan wedding
விக்னேஷ் சிவன் தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படங்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மணமக்களுடன் காணப்படுகிறார்.
nayanthara vignesh shivan wedding
ஷாருக்கானுடன் இந்தப் படங்களைப் பகிர்ந்து கொண்ட விக்னேஷ், “இதற்கு மேல் யார் என்ன கேட்க முடியும்! எங்கள் திருமணத்தின் போது இந்த அடக்கமான, கனிவான, அழகான மற்றும் அற்புதமான மனிதர் எங்களுடன் இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாங்கள். என குறிப்பிட்டிருந்தார்.
nayanthara vignesh shivan wedding
இந்த படங்களில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் காணப்படுகின்றனர். விக்னேஷ், திருமணத்தில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பொழிந்ததற்காக இரு சூப்பர் ஸ்டார்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
nayanthara vignesh shivan wedding
ரஜினிகாந்த் உள்ள மற்றொரு படத்தொகுப்புடன் விக்னேஷ் சிவன், “அன்பான தலைவர் ரஜினிகாந்த் சார் எங்கள் திருமணத்தை மிகவும் நேர்மறை மற்றும் நன்மையுடன் ஆசீர்வதிக்கிறார். மகிழ்ச்சி எங்கள் சிறப்பு நாளின் ஒரு மாத கொண்டாட்ட விழாவில் ஒரு பதிவு என குறிப்பிட்டிருந்தார்.
Nayanthara Vignesh shivan wedding
நயன்தாராவை தொடர்ந்து திருமண நாயகன் விக்னேஷ் சிவனின் கைகளை பிடித்து வாழ்த்து கூறுகிறார் சூப்பர் ஸ்டார். அந்த தருணத்தில் பெரும்மகிழ்ச்சி அடையும் மணமகனின் புகைப்படம் இதோ!
Nayanthara Vignesh shivan wedding
அழகின் உருவான நயன்தாரா சிவப்பு வண்ண உடையில் தேவைதையாக ஜொலித்தார். பச்சைகல் பதித்த வைர நெக்லஸ் கழுத்துக்களை அலங்கரிக்க கொண்டை முழுவதும் பூச்சூடி புதுமையாய் வந்த மணமகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்க நிற உடையில் களமிறங்கினார் மணமகன் விக்கி..
Nayanthara Vignesh shivan wedding
கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் கலகலப்பான நிகழ்வும் நடைபெற்றது. மாலை சூட வந்த காதல் மணவாளனை புறக்கணிக்கும் வகையில் பாசாங்கு செய்த மணநாள் நாயகி ஒதுங்கி சென்று கணம் ஏங்க வைத்தார்.
Nayanthara Vignesh shivan wedding
7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு காதலியை கரம் பிடித்த மகிழ்ச்சியில் நாயகியின் உச்சி முகர்ந்த விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி தருணம்.
Nayanthara Vignesh shivan wedding
நயன்தாரா திருமணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது மகனுடன் கலந்துகொண்டார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.