ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஈகை திருநாளில் ஏசியா நெட்டின் வாழ்த்துக்களுடன்.. பிரபலங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

Celebrities who congratulated Eid Mubarak

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லீம் பெருமக்களுக்கு நடிகரும், அரசியல் தலைவருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈகை பெருநாள் குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில் "தமக்குக் கிடைக்கும் நன்மைகளை முப்பாகப் பங்கீடாய் பிறர்க்கும் தந்து ஈகையின் மகிழ்வை உலகிற்கு உணர்த்தும் பக்ரீத் திருநாள் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்து." என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !

பிரபல நடிகை நக்மா, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கவும், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சரியான பாதையைக் காட்டவும் விரும்புகிறேன். அனைவருக்கும் ஈத் முபாரக்! என் வாழ்த்து கூறியுள்ளார்.

 


கௌதம் கார்த்திக் தன பதிவில்,  உங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட பக்ரீத் மற்றும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண்டிருக்கட்டும். ரமலான்! என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios