MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா... - கோபத்தில் கொந்தளித்தாரா இயக்குனர் ஷங்கர்?

உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா... - கோபத்தில் கொந்தளித்தாரா இயக்குனர் ஷங்கர்?

உதயநிதி படத்தை எடுக்க மட்டும் சிறப்பு அனுமதி கிடைத்ததாகவும், இயக்குனர் ஷங்கர் படத்திற்கு அப்படி அனுமதி கொடுக்காததால், அவர் கோபத்தில் கொந்தளித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 11 2022, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் ஷங்கர், தற்போது ராம் சரணை வைத்து இயக்கி வரும் RC15 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருந்தாலும், கையேடு கையாக பாதியில் நிறுத்தப்பட்டு... பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் துவங்க உள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பையும் முடித்து கொடுக்க வேண்டும் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

25

அதன் படி 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்தியன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தில், நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

மேலும் செய்திகள்: மீண்டும் ஹனி மூனா..? திடீர் என ஜோடியாக வெளிநாட்டுக்கு பறந்த நயன் - விக்கி ஜோடி!
 

35

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் நடத்த 10 நாட்கள் அனுமதி கோரப்பட்டதாம்.  தற்போது அங்கு அரசு அலுவல்கள் நடைபெறுவதால் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளனர்.  
 

45

 மேலும் ஏற்கனவே மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிக்கும் 'மாமன்னன்' படப்பிடிப்பு விதிமுறையின் படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடத்தப்பட்டு வருகிறதாம். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் திங்கட்கிழமையும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டும்  அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதன்பின், கடும் முயற்சிகளுக்குப் பின் சிறப்பு அனுமதி பெற்று திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாகும் போட்டோஸ்!
 

55

இதனை கேள்வி பட்ட இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து அவர்களுக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? என்று கோவமாக கேள்வி எழுப்பியதாக அரசால் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை எவ்வித உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின்
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Demonte Colony 3: பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!
Recommended image2
Vijay Movie: எந்த தடையும் போடமுடியாது.! விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.! தெறிக்கவிடப்போகும் தளபதி ரசிகர்கள்.!
Recommended image3
அறைக்குள்ளேயே ஒரு மாதம் முடங்கிய செம்பருத்தி நாயகி.! ஷபானா விவரிக்கும் 'அன்டோல்ட் ஸ்டோரி'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved