- Home
- Cinema
- அஜித்தை கண்டுகொள்ளாத ஷங்கர்.. இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?- பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் சீக்ரெட்
அஜித்தை கண்டுகொள்ளாத ஷங்கர்.. இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?- பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் சீக்ரெட்
shankar vs Ajith : தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், ரஜினி, கமல், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஷங்கர், அஜித்துடன் மட்டும் ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை.

தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கம் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்தி சுப்புராஜிடம் இருந்து பெற்றுள்ளார். இது தன்னுடைய கதை என, கார்த்தி சுப்புராஜின் துணை இயக்குனர் ஒருவர் கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இதையடுத்து ஒருவழியாக அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு, பூனேவில் துவங்கியது.
இப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை தமிழில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், ரஜினி, கமல், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஷங்கர், அஜித்துடன் மட்டும் ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை. இந்நிலையில், அதற்கான காரணத்தை நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பைல்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: “ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமானது அஜித் தான். 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், ஷங்கருக்கும் அஜித்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் படம் பாதியில் நின்று போனது. இதையடுத்து பிரசாந்தை நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் ஷங்கர்.
பிரம்மாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், அவர் இயக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் என அனைத்திலும் பிரம்மாண்டத்தை காட்டுவார். ஆனால் அஜித்தோ பிரம்மாண்டத்தை சுத்தமாக விரும்பாதவர், மேலும் பட விழாக்கள் மற்றும் புரமோஷன்களிலும் கலந்துகொள்ள மாட்டார். இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருப்பதால் தான் இதுநாள் வரை அஜித்தும் ஷங்கரும் இணைந்து பணியாற்றவில்லை” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... salman khan marriage : வாரிசு நடிகையுடன் சல்மான் கானுக்கு ரகசிய திருமணம்?- லீக்கான போட்டோ... ஷாக்கான ரசிகர்கள்