- Home
- Cinema
- salman khan marriage : வாரிசு நடிகையுடன் சல்மான் கானுக்கு ரகசிய திருமணம்?- லீக்கான போட்டோ... ஷாக்கான ரசிகர்கள்
salman khan marriage : வாரிசு நடிகையுடன் சல்மான் கானுக்கு ரகசிய திருமணம்?- லீக்கான போட்டோ... ஷாக்கான ரசிகர்கள்
salman khan marriage : நடிகர் சல்மான் கானுக்கும், பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இருவரும் மோதரம் மாற்றிக் கொள்ளும்படியான புகைப்படம் ஒன்றும் வைரலாகி பரவி வந்தது.

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சல்மான் கான். 56 வயதாகும் இவர் இன்றளவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகர்களுக்கு இணையாக தோற்றத்தை மெயிண்டெயின் செய்து வருகிறார். படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் இவர் அவ்வப்போது காதல் கிசுகிசுக்களில் சிக்குவதுண்டு. அதன்படி இவர் முன்னதாக ஐஸ்வர்யா ராய் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோரை காதலித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் அந்த உறவு திருமணம் வரை செல்லவில்லை. இந்நிலையில், தற்போது நடிகர் சல்மான் கானுக்கும், பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இருவரும் மோதரம் மாற்றிக் கொள்ளும்படியான புகைப்படம் ஒன்றும் வைரலாகி பரவி வந்தது.
இந்நிலையில், அந்த புகைப்படம் போலியானது என தெரியவந்தது. அது நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் என்றும், அதில் சல்மான் கான் மற்றும் சோனாக்ஷி சின்ஹா முகத்தை மார்பிங் செய்து யாரோ இணையத்தில் பரவ விட்டதே இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.
பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், சல்மான் கானுக்கு ஜோடியாக தபங் படத்தின் இரண்டும் பாகங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate : பலே திட்டத்துடன் களமிறங்கும் சிம்பு... இந்த வார எலிமினேஷனில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?