கவனத்தை ஈர்த்த சமந்தா கையில் அணிந்துள்ள இரு மோதிரங்கள்! மயோசிடிஸ் சிகிச்சைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?
நடிகை சமந்தா நடிப்பில் நாளைய தினம் 'யசோதா' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக சமந்தா இன்று வெளியிட்ட புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த இரு மோதிரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மோதிரத்திற்கும், அவரது சிகிச்சைக்கும் என்ன தொடர்பு? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாடகை தாய் விஷயத்தில் நடைபெறும் மருத்துவ முறைகேடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'யசோதா'. இந்த படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை (நவம்பர் 11 ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சமந்தா தற்போது மயோசிடிஸ் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வருவதால், நேரடியாக எந்த புரோமோஷன் பணிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், ஊடகம் வழியாக... படத்தை புரோமோட் செய்து வருகிறார்.
மனதை கொள்ளையடிக்கும் மெலடி பாடலாக வெளியாகியுள்ள தனுஷின் 'வா வாத்தி' லிரிகள் பாடல்! வீடியோ..
அந்த வகையில், இன்று தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... நாளை யசோதா திரைப்படம் வெளியாவதால் மிகவும் பதட்டமாகவும், உச்சாகமாகவும் உள்ளது. நாளை உங்கள் தீர்ப்புக்காக என்னைப் போலவே காத்திருக்கும் என் இயக்குநர்கள், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் ஆதரவு கொடுங்கள் என, மோதிர விரல்களை மடக்கி... ஆல்காட்டி விரலை காட்டியது போன்று போஸ் கொடுத்திருந்தார்.
இந்த புகைப்படத்தில் சமந்தா அணிந்துள்ள இரு மோதிரம் தான் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துளளது. இந்த மோதிரத்திற்கும், சமந்தாவின் சிகிச்சைக்கும் சம்மந்தம் உள்ளதா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது. சமந்தா தன்னுடைய வலது கை மோதிர விரலில் முத்து மோதிரமும், இடது கை மோதிர விரலில் இளம்சிவப்பு மாணிக்க மோதிரமும் அணிந்துள்ளார்.
கொசுவலை போன்ற ஷர்ட் அணிந்து... பளபளக்கும் மேனியை பளீச் என காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்! போட்டோஸ்..!
இந்த மோதிரம் குறித்து ஜோதிடம் கூறும் தகவல் என்ன தெரியுமா?
சிவப்பு நிற மாணிக்க கல் அணிவதால், அதை அணிந்திருப்பவருக்கு பெயர், புகழ், மரியாதை கூடும்... எதிர்மறை எண்ணங்களை குறைத்து, தன்னம்பிக்கையை மாணிக்க கல் கொடுக்கும் வல்லமை கொண்டது என கூறப்படுகிறது. மேலும், ரத்த ஓட்டம் சீராக செயல்பட உதவுவதோடு, ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.
அதே போல் முத்து அணிவதன் மூலம், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. முத்து ஒருவரது கோபத்தை குறைத்து, அவரை சாந்தமாக்குகிறது. தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை குறைத்து, அமைதியாக உணர வைக்கிறது. ஒருவரது வாழ்க்கையை வளமுடையதாக மாற்ற கூடியது முத்து. அதே போல் எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபட்டு தன்னபிக்கையோடு செய்யும்.
சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனை மட்டும் இன்றி, மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்... ஆன்மீக அடிப்படியில் தான் இந்த இரு மோதிரங்களை அணிந்திருக்க கூடும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. எது எப்படி இருந்தாலும், நடிகை சமந்தா... விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.