நாகசைதன்யாவுக்கு எங்களுக்கு என்ன உறவு என்பது நன்றாக தெரியும்? வேதனையோடு பேசிய ப்ரீத்தம் ஜூகால்கர்..!
நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu) - நாக சைதன்யாவிடம் (Naga Chaitanya) இருந்து பிரிவதாக அறிவித்த பின்னர், என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பதை தற்போது வரை தெரிவிக்கவில்லை. எனவே நெட்டிசன்கள் பல்வேறு யுகங்களின் அடிப்படையில் கட்டுக்கதைகளை அள்ளிவிட துவங்கினர். குறிப்பாக சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகால்கர் உடன் வைத்திருந்த உறவு தான் விவாகரத்துக்கு காரணம் என வதந்தி பரவியது. இதற்க்கு முதல் முறையாக ப்ரீத்தம் ஜூகால்கர் மனம் திறந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில், இளம் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சமந்தா - நாக சைதன்யா, இருவரும் ஒன்றாக இணைந்து தங்களுடைய நான்காம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு சில தினங்களுக்கு முன், விவாகரத்து குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்த சம்பவம் தற்போது வரை பரபரப்பாக தமிழ், தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வந்தாலும். இதுவரை சமந்தா - நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.
சுமார் 7 வருடங்களாக உருகி உருகி காதலித்து, மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட இவர்கள் எந்த ஒரு வலுவான காரணமும் இன்றி இப்படி ஒரு முடிவெடுக்க வாய்ப்பே இல்லை என்றாலும் , அப்படி மனம் உடைந்து பிரிந்து செல்வதற்கு என்ன காரணம் என்று நிறைய யூகங்கள் எழுந்து வருகிறது.
அந்த வகையில் சமந்தாவின் ஸ்டைலிஸ்டாக பணியாற்றிய ப்ரீதம் ஜுகல்கர், உடல் சமந்தா காட்டிய நெருக்கம் தான் இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.
இதுகுறித்து ஏற்கனவே சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா சிங் விளக்கம் கொடுத்த நிலையில் தற்போது ப்ரீத்தம் மனம் திறந்து பேசியுள்ளார்.
நான் சமந்தாவை ஜீஜி என்று தான் அழைப்பேன். ஜீஜி என்றால் வட இந்தியாவில் சகோதரி என்று அர்த்தம். அந்த மாதிரியான உறவில் மட்டுமே நாங்கள் இருவரும் பழகி வந்தோம்.
ஆனால் எங்கள் இருவரையும் இணைத்து வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. நாங்கள் இருவரும் எப்படி பழகினோம் என்பது நாக சைதன்யாவுக்கு மிகவும் நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவர்மௌனமாக இருப்பது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவாகரத்து விவகாரத்தில், சமந்தாவுக்கு ஆதரவாக மஞ்சிமா மோகன், ரகுல் ப்ரீத் சிங், போன்ற நடிகைகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.