MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 7 ஆஸ்கர் விருதுகளை வென்று கெத்து காட்டிய அமெரிக்க படம்... அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

7 ஆஸ்கர் விருதுகளை வென்று கெத்து காட்டிய அமெரிக்க படம்... அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை வென்று மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறிய எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2023, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உலகளவில் இன்று ஹாட் டாப்பிக் ஆக இருப்பது ஆஸ்கர் விருது தான். 95-வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 23 பிரிவுகளில் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்தியர்களுக்கு இது ஸ்பெஷலான ஒரு ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்திய படைப்புகளுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற ஆவண குறும்படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன.

இதுதவிர ஆஸ்கர் விருது விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறிய திரைப்படம் தான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once). அமெரிக்க திரைப்படமான இது கடந்தாண்டு வெளியாகி இருந்தது. இப்படம் ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 11 பிரிவுகளில் நாமினேட் ஆகி இருந்தது. அதில் 7 பிரிவுகளில் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய 7 பிரிவுகளில் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இவ்வளவு விருதை வென்று குவித்துள்ள இப்படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை தற்போது பார்க்கலாம்.

இது ஒரு அட்வெஞ்சர், ஆக்‌ஷன், பிளாக் காமெடி, சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம். இந்த படத்தின் ஒன்லைன் என்னவென்றால், கதையின் நாயகியான மிச்செல் யோஹ், தனது கணவர் மற்றும் மகளுடன் பூமியில் ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஆல்பா யூனிவர்ஸ் என மற்றொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்து கதையின் நாயகன், பூமியில் உள்ள நாயகியிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார்.

இதையும் படியுங்கள்... Oscars 2023 : ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் யார்... யார்? - முழு பட்டியல் இதோ

34

அது என்னவென்றால், ஆல்பா யூனிவர்ஸில் உள்ள ஹீரோ இறந்துவிடுவதாகவும், அங்குள்ள அவரது மகள், உலகத்தை அழிக்கக்கூடிய மிகப்பெரிய வில்லியாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார். இதையடுத்து நாயகி மிச்செல் என்ன செய்தார், வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருந்து வந்து உலகை அழிக்க நினைக்கும் தனது மகளின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தினாரா இல்லையா என்பதை அதகளமான திரைக்கதை உடன் சொல்லியுள்ள படம் தான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்.

44

இப்படத்தின் கதை கேட்க சிம்பிளாக இருந்தாலும், அதனை இயக்குனர்கள் டேனியல் குவான் மற்றும் டேனியல் ஸ்கீனெர்ட் ஆகியோர் படமாக்கிய விதம் தான் இப்படத்தை உலகளவில் தனித்துக் காட்டி இருக்கிறது. பிழை கண்டுபிடிக்க முடியாத வகையில், அனைத்து ஏரியாக்களிலும் அதகளப்படுத்தி இருந்ததே இப்படம் ஆஸ்கரில் இத்தனை விருதுகளை வென்று குவித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' & ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ - வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யார் யார்.?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved