Oscars 2023 : ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் யார்... யார்? - முழு பட்டியல் இதோ
95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் எஞ்சல் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், அதில் விருது வென்றவர்கள் யார் யார் என்பதன் முழு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
1. சிறந்த திரைப்படம்
டேனியல் குவான், டேனியல் ஸ்கீனெர்ட் இயக்கத்தில் வெளியான எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) திரைப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
2. சிறந்த நடிகர்
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பிரெண்டன் பிரேசர் (Brendan Fraser) வென்றுள்ளார். தி வேல் (The Whale) என்கிற திரைப்படத்தில் சிறப்பான வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
3. சிறந்த நடிகை
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்தில் நடித்த மிச்செல் யோஹ் வென்றார்.
4. சிறந்த படத்தொகுப்பாளர்
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பவுல் ரோஜெர்ஸுக்கு (Paul Rogers) சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
5. சிறந்த இயக்குனர்
டேனியல் குவான் மற்றும் டேனியல் ஸ்கீனெர்ட் ஆகியோருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தை இயக்கியதற்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
6. சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கே ஹூய் குவான் (Ke Huy Quan) வென்றார். எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
7. சிறந்த துணை நடிகை
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis) வென்றுள்ளார். எவ்ரிதிங் எவ்ரிவேர் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
8. சிறந்த ஆவணப்படம்
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை நாவல்னி என்கிற திரைப்படம் வென்றுள்ளது. இப்படத்தை எடுத்த டேனியல் ரோகர், ஒடேசா ரே, டயான் பெக்கர், மெலானி மில்லர், ஷேன் போரிஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
9. சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை அன் ஐரிஸ் குட்பாய் (An Irish Goodbye) என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தை எடுத்த டாம் பெர்க்லே மற்றும் ரோஸ் ஒயிட் ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
10. சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் பிரெண்ட் (James Friend) என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
11. சிறந்த ஒப்பனைக் கலைஞர்
சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை அட்ரியன் மொரோட், ஜுடி சின் மற்றும் அன்னேமெரி பிராட்லே ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தி வேல் (The Whale) படத்துக்காக அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
12. சிறந்த ஆடை வடிவமைப்பாளர்
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ருத் இ கார்டர் (Ruth E. Carter) வென்றுள்ளார். பிளாக்பாந்தர் வகாண்டா ஃபாரெவர் (black panther wakanda forever) திரைப்படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
13. சிறந்த சர்வதேச திரைப்படம்
சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்றது.
14. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது.
15. சிறந்த ஒரிஜினல் இசை
சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற ஜெர்மனி நாட்டு திரைப்படம் வென்று உள்ளது. அப்படத்திற்கு இசையமைத்த வோல்கர் பெர்டெல்மேன் இவ்விருதை பெற்றுக்கொண்டார்.
16. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
சிறந்த விஷுவல் எஃபெக்ஸுக்கான ஆஸ்கர் விருது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
17. சிறந்த திரைக்கதை
சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
18. சிறந்த தழுவல் திரைக்கதை
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை உமன் டாக்கிங் (Women Talking) என்கிற திரைப்படம் வென்றுள்ளது. அப்படத்திற்கு திரைக்கதை அமைத்த சாரா பொல்லேவுக்கு (Sarah Polley) இந்த விருது வழங்கப்பட்டது.
19. சிறந்த அனிமேஷன் குறும்படம்
தி பாய், தி மோல், தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் என்கிற குறும்படத்துக்கு சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
20. சிறந்த ஒரிஜினல் பாடல்
ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
21. சிறந்த ஒலி
டாப் கன் மேவ்ரிக் திரைப்படம் சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர்.
22. சிறந்த அனிமேஷன் படம்
சிறந்த அனிமேஷன் பிரிவில் கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) என்கிற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
23.சிறந்த ஆவண குறும்படம்
இந்தியாவின் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. இப்படம் தமிழகத்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஊட்டிப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?
- Naatu Naatu Songs win Oscar Awards
- academy awards 2023
- best director award oscar 2023
- oscar best actor award 2023
- oscar best actress award 2023
- oscar best movie award 2023
- oscar nominees 2023
- oscar winners full list
- oscars 2023
- oscars 2023 live
- oscars 2023 winners
- oscars 2023 winners list
- oscars winners lists
- rrr
- watch oscars 2023 online