- Home
- Cinema
- விடிவி முதல் பிரேமம் வரை... காதல் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் ஆகவுள்ள ரொமாண்டிக் ஹிட் படங்களின் முழு விவரம் இதோ
விடிவி முதல் பிரேமம் வரை... காதல் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் ஆகவுள்ள ரொமாண்டிக் ஹிட் படங்களின் முழு விவரம் இதோ
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கினாலே காதலர் தின கொண்டாட்டங்களும் களைகட்டிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக, காதலர்களின் மனம்கவர்ந்த பிளாக்பஸ்டர் ஹிட் காதல் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். சென்னையில் காதலர் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ்
காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் தமிழ் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன. அந்த இரண்டுமே கவுதம் மேனன் படங்கள் தான். அதன்படி காதலர்களின் பேவரைட் படமான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதேபோல் மாதவன் - ரீமா சென் நடித்த மின்னலே படமும் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
மலையாளம்
மலையாள படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணமாக இருந்த படம் பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் நிவின் பாலி - சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் காதலர் தின ஸ்பெஷலாக ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதோடு கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆன ஹிருதயம் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... சீரியல் ஹீரோயின் உடன் பைக்கில் செம்ம ஸ்பீடாக சென்ற TTF வாசன்... பயத்தில் அலறிய நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்
இந்தி
இந்தியில் ஷாருக்கான் மற்றும் கஜோல் இணைந்து நடித்த ஐகானிக் காதல் திரைப்படமான தில்வாலே துல்கானியா லே சாயேங்கே என்கிற இந்தி படமும் தற்போது சென்னையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதோடு ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே இணைந்து நடித்த டமாஷா என்கிற படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
ஆங்கிலம்
உலகளவில் காதலர்களால் கொண்டாடப்பட்ட காதல் காவியமான டைட்டானிக் திரைப்படமும் இந்த ஆண்டு காதல் தின ஸ்பெஷலாக சென்னையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தை அவதார் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உஷாரான ‘லியோ’ விஜய்... வசமாக சிக்கிக்கொண்ட அஜித் - ‘ஏகே 62’ படத்துக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு?