MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீரியல் ஹீரோயின் உடன் பைக்கில் செம்ம ஸ்பீடாக சென்ற TTF வாசன்... பயத்தில் அலறிய நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

சீரியல் ஹீரோயின் உடன் பைக்கில் செம்ம ஸ்பீடாக சென்ற TTF வாசன்... பயத்தில் அலறிய நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்

விஜய் டிவி சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகையுடன் யூடியூப்பர் TTF வாசன் பைக் ரைடு சென்ற வீடியோ தற்போது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2023, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் TTF வாசன். இவர் பைக் ரைடிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பேமஸ் ஆனார். இதன் காரணமாக இவருக்கு யூடியூப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் ஆனாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். கடந்தாண்டு பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் TTF வாசன்.

25

இதையடுத்து அவர் மீது கோவை சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடும் வண்டியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஃபேன்ஸ் மீட் ஒன்றை நடத்தி இருந்தார். அப்போது அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் அதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் கடலூரில் ஒரு அலுவலக திறப்பு விழாவுக்கு சென்றபோது இவரது ரசிகர்கள் அங்கு கூடி அட்ராசிட்டி செய்ததால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவமும் அரங்கேறியது.

இதையும் படியுங்கள்... உஷாரான ‘லியோ’ விஜய்... வசமாக சிக்கிக்கொண்ட அஜித் - ‘ஏகே 62’ படத்துக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு?

35

இதன்பின் வீடியோ வெளியிட்டு தான் கடைக்கு போய் கட்டப்பை வாங்கி வருகிற மாதிரி செல்லும் இடமெல்லாம் கேஸை வாங்கி வருவதாக நக்கலாக பேசி இருந்தார். அதோடு தனது ரசிகர்கள் மீது கைவைத்த போலீஸே தங்களுக்கு ராஜமரியாதை கொடுக்க வைப்பேன் என அவர் சவால்விடும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை ஒருவருடன் பைக் ரைடு சென்று வீடியோ வெளியிட்டுள்ளார் TTF வாசன்.

45

விஜய் டிவியின் ஒளிபரப்பான மெளன ராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரவீனா தாஹா. இவர் ராட்சசன் உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கோமாளியாக கலந்துகொண்டுள்ளார். இவரைத் தான் தனது பைக்கில் அமர வைத்து ரைடு சென்றுள்ளார் TTF வாசன். 

55

அப்போது வாசன் ஸ்பீடாக பைக்கை ஓட்டியபோது ரவீனா அலறிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளன. இதனால் பதறிப்போன வாசன், நான் ஒன்னும் அவ்ளோ வேகமா போலைங்க, நீ இப்படி கத்தி என்ன கேஸ்ல மாட்டி விட்றாத என ரவீனாவிடம் கூறிய காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. சீரியல் நடிகையுடன் TTF வாசன் பைக் ரைடு சென்ற வீடியோ தற்போது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... உடல்நலம் தேறிய சமந்தா! டைட் உடையில் தீவிர ஒர்க்கவுட் செய்து ராசிக்காரர்களை மெர்சலாக்கும் வைரல் வீடியோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரவீணா தாஹா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved