ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகியது ஏன்? பிக்பாஸ் வாய்ப்பால் இந்த முடிவா? உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த அர்ச்சனா
VJ Archana : ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை நடிகை அர்ச்சனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
விஜே-வாக பணியாற்றியவர் அர்ச்சனா. இவர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்த பின்னர் தான் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதில் வில்லியாக நடித்து வந்தார் அர்ச்சனா. அவர் நடித்த முதல் சீரியலும் இதுதான். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து நடிகை அர்ச்சனா திடீரென விலகினார். இதற்கான காரணத்தையும் அவர் வெளியிடாமல் இருந்து வந்தார்.
இதற்கிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதால், அதில் பங்கேற்பதற்காகத் தான் அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து லீக்காவும் தகவலில் அர்ச்சனா பெயரும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
இதையும் படியுங்கள்... திடீர் மாரடைப்பு... காதலி பட இயக்குனர் சித்து மரணம் - சோகத்தில் திரையுலகினர்
இதனிடையே ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை நடிகை அர்ச்சனா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது : “ராஜா ராணி 2 சீரியலில் 3 வருஷத்துக்கு மேல் நடித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதில் இருந்து விலகிவிட்டேன்.
நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்துகொள்கிறேனா? இல்லையா? என்பது பற்றி சில நாட்களில் தெரியவரும், பொறுத்திருந்து பாருங்க என கூறி இருக்கிறார் அர்ச்சனா. இதன்மூலம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். அதில் இவர் வில்லியாக இருக்கிறாரா அல்லது ஹீரோயினாக ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... குருவுக்காக இணைந்த சிஷ்யர்கள்! ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2-வை இயக்கும் 3 இயக்குனர்கள்- அட்லீ மட்டும் மிஸ்ஸிங்