MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திடீர் மாரடைப்பு... காதலி பட இயக்குனர் சித்து மரணம் - சோகத்தில் திரையுலகினர்

திடீர் மாரடைப்பு... காதலி பட இயக்குனர் சித்து மரணம் - சோகத்தில் திரையுலகினர்

காதலி பட இயக்குனர் சித்துவின் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது, அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 14 2022, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11

கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்து. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு விக்னேஷ், தேவயாணி நடிப்பில் வெளியான காதலி படம் மூலம் தமிழ் திரையுல்கில் இயக்குனராக அறிமுகமானார்.

இதையடுத்து மன்சூர் அலிகானை வைத்து ‘ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்’ என்கிற திரைப்படத்தை இயக்கினர். சில காரணங்களால் அப்படம் ரிலீசாகவில்லை. இதன் பின் அவர் பெரிய அளவில் படங்களை இயக்காவிட்டாலும், ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார். அந்த சீரியலில் நடிக்கவும் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சிம்பு பட ரிலீஸன்று ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்க உள்ள ட்ரீட்... நானே வருவேன் படத்தின் சூப்பர் அப்டேட் இதோ

இயக்குனர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்கிற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சித்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது. 

இயக்குனர் சித்துவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பனை. இப்படத்தை இவரது உடன்பிறந்த சகோதரர் பொன். ஆதி ஆறுமுகம் தான் இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சித்து மரணமடைந்திருப்பது அப்படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

இதையும் படியுங்கள்... குருவுக்காக இணைந்த சிஷ்யர்கள்! ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2-வை இயக்கும் 3 இயக்குனர்கள்- அட்லீ மட்டும் மிஸ்ஸிங்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Recommended image2
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Recommended image3
மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved