பிறந்தநாளில் நற்பணி மன்றம் துவங்கிய விஷ்ணு விஷால்! அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' துவங்கியுள்ளதாக அறிவித்த நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழில், கடந்த 2009 ஆம் ஆண்டு... இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.
இதை தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ள நரி கூட்டம், நீர் பறவை, முண்டாசு பட்டி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் தொடர்ந்து பாராட்டுகளை பெற்றது.
'ஐ' பட வில்லன் சுரேஷ் கோபி மகளுக்கு எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்த விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சமீப காலமாக நடிகர் என்பதை தாண்டி, சில வெற்றிப்படங்களையும் தயாரித்த விஷ்ணு விஷால், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் உள்ள, விஷ்ணு விஷால்... தன்னுடைய ரசிகர் மன்றத்தை தற்போது 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றமாக' மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள, அறிக்கையில் கூறியுள்ளதாவது...
"என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.!
இதன் தலைவராக சீத்தாராம் அவர்களும், செயலாளராக கே.வி.துரை அவர்களும் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.
மேலும் விஷ்ணு விஷால், அடிப்படையில் விளையாட்டுத் துறையில் இருந்தவர் என்பதால், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும்,... இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது!
மேலும் இன்று விஷ்ணு விஷால் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு.. ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவரின் ரசிகர்கள் அரசு மருத்துவமனையில், ரத்த தானம், முதியோர் இல்லங்களில் அன்னதானம், விளையாட்டு வீரர்களுக்கு உதவி என பல்வேறு விஷயங்களை செய்து அசதியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாக, விஷ்ணு விஷால் ரசிகர்களை பலர் மனதார பாராட்டி வருகிறார்கள்.