MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமண நாள் பரிசாக பிறந்த குழந்தை; மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால்!

திருமண நாள் பரிசாக பிறந்த குழந்தை; மீண்டும் அப்பா ஆனார் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் அவரது இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவுக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 22 2025, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Vishnu Vishal Becomes Father Again : வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அவர், கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

24
Vishnu Vishal

Vishnu Vishal

விஷ்ணு விஷாலின் Irandu Vaanam

அவர் நடிப்பில் தற்போது இரண்டு வானம் திரைப்படம் உருவாகி உள்ளது. அப்படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். அப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர கட்டா குஸ்தி படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விஷ்ணு விஷால். மேலும் மோகன் தாஸ் என்கிற படமும் அவர் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இதையும் படியுங்கள்... 7 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ராட்சசன் கூட்டணி; அசத்தலான பர்ஸ்ட் லுக்குடன் வெளிவந்த டைட்டில்!

34
Vishnu VIshal Marriage

Vishnu VIshal Marriage

Vishnu Vishal திருமண வாழ்க்கை

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2010-ம் ஆண்டே திருமணம் செய்துகொண்டார். அவரது முதல் மனைவியின் பெயர் ரஜினி. இந்த ஜோடிக்கு ஆர்யன் என்கிற மகனும் உள்ளார். சுமார் 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது. ரஜினியுடனான பிரிவுக்கு பின்னர், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது காதலில் விழுந்த விஷ்ணு விஷால், அவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

44
Vishnu Vishal son and Daughter

Vishnu Vishal son and Daughter

மீண்டும் அப்பா ஆனார் Vishnu Vishal

ஜுவாலா கட்டாவை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 22ந் தேதி கரம்பிடித்த விஷ்ணு விஷால், தன்னுடைய நான்காவது திருமண நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், ஒரு குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமண நாளன்று தங்களுக்கு மகளே பரிசாக கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். மேலும் தன்னுடைய மகன் ஆர்யன் அண்ணனாகிவிட்டதாகவும் குறிப்பிட்டு குழந்தையின் கையை பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். முதல் குழந்தை பெற்றெடுத்துள்ள விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Vishnu : விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ரெடி.. SKயின் நெருங்கிய நண்பரோடு இணைகிறார் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஷ்ணு விஷால்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image2
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image3
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved