- Home
- Cinema
- 7 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ராட்சசன் கூட்டணி; அசத்தலான பர்ஸ்ட் லுக்குடன் வெளிவந்த டைட்டில்!
7 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ராட்சசன் கூட்டணி; அசத்தலான பர்ஸ்ட் லுக்குடன் வெளிவந்த டைட்டில்!
ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Vishnu Vishal starrer IRANDU VAANAM Movie : தமிழ் சினிமா கொடுத்த தரமான கிரைம் த்ரில்லர் படங்களில் முன்னணியில் இருப்பது ராட்சசன் திரைப்படம் தான். 2018ல் வெளியான இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்த காம்போ மீண்டும் ஒரு புதிய படத்துடன் பார்வையாளர்களை சந்திக்க உள்ளது. தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸிற்காக டி ஜி தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
IRANDU VAANAM First Look
அதன்படி இரண்டு வானம் என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரேமலு பட நாயகி மமிதா பைஜு நடித்துள்ளார். மமிதா பைஜுவின் மூன்றாவது தமிழ் படம் இதுவாகும். இதற்கு முன்னர் ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ரிபல் படத்தில் நடித்திருந்த இவர், தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் டிஜே அருணாச்சலம் ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... Vishnu : விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ரெடி.. SKயின் நெருங்கிய நண்பரோடு இணைகிறார் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
Vishnu Vishal
இரண்டு வானம் திரைப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு தினேஷ் கே பாபு, எடிட்டிங் சான் லோகேஷ், கலை இயக்கம் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் கொரியோகிராபி விக்கி. இது ஒரு காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஆகும். இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ரிலீஸ் எப்போது இருக்கும் என்பதும் விரைவில் தெரியவரும்.
Vishnu vishal Line up
இரண்டு வானம் திரைப்படத்தின் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் விஷ்ணு விஷால் கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். அப்படம் தோல்வி அடைந்த நிலையில், தற்போது கம்பேக் கொடுக்க காத்திருக்கும் விஷ்ணு விஷால் கைவசம் இரண்டு வானம் படம் மட்டுமின்றி மோகன் தாஸ், ஆர்யன் ஆகிய திரைப்படங்களும் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வட போச்சே... ரஜினியின் பிளாப் படத்துக்கு ஆசைப்பட்டு ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ