MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வட போச்சே... ரஜினியின் பிளாப் படத்துக்கு ஆசைப்பட்டு ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ

வட போச்சே... ரஜினியின் பிளாப் படத்துக்கு ஆசைப்பட்டு ராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ

தனுஷ் இயக்கியுள்ள ராயன் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ள சந்தீப் கிஷான் கேரக்டரில் பிரபல ஹீரோ நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 30 2024, 07:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Raayan Movie

Raayan Movie

தனுஷின் 50வது படம் ராயன். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி, இயக்கியும் உள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ராயன் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Raayan

Raayan

ராயன் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. கடந்த ஜூலை 26-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரிலீசான மூன்றே நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படம் தொடர்ந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இதனால் தனுஷ் செம குஷியில் உள்ளார்.

இதையும் படியுங்கள்... "தனுஷ் கலக்கிடீங்க போங்க" - ராயன் படம் பார்த்து பிரம்மித்த "சூப்பர் ஸ்டாரின்" வாழ்த்து வைரல்!

34
kalidas, Dhanush, Sundeep kishan

kalidas, Dhanush, Sundeep kishan

ராயன் படத்தில் தனுஷுக்கு அடுத்தபடியாக அதிக ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்றால் அது சந்தீப் கிஷான் கேரக்டர் தான். அந்த கேரக்டரில் முதலில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவரை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அவர் ரஜினி படத்தில் பிசியாக இருந்ததால் ராயனில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டார். அந்த ஹீரோ வேறுயாருமில்லை நடிகர் விஷ்ணு விஷால் தான். அவர் தான் சந்தீப் கிஷானுக்கு பதிலாக நடிக்க இருந்தாராம்.

44
Vishnu vishal rejected raayan movie

Vishnu vishal rejected raayan movie

அந்த சமயத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றதால் ராயன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணி இருக்கிறார் விஷ்ணு விஷால். நிஜமாவே இது ஒரு காஸ்ட்லி மிஸ் என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் ராயன் படத்துக்கு பதிலாக அவர் தேர்வு செய்து நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அவர் மிஸ் பண்ணிய ராயன் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ராயன் படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க... ஆகஸ்ட் 2ந் தேதி ரிலீஸ் ஆகும் 7 தமிழ் படங்கள் - முழு லிஸ்ட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
விஷ்ணு விஷால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved