ஸ்ரீரெட்டி உங்கள் மீது வைத்த பாலியல் புகார்... நடவடிக்கை என்ன? நடிகர் விஷால் ஓபன் டாக்
கோலிவுட்டிலும் பாலிய சீண்டல் நடப்பதாக கூறிய விஷால், அதுகுறித்து விசாரிக்கு தனி கமிட்டி அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
vishal
நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அப்போது கேரளாவில் ஹேமா கமிட்டி மூலம் மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழிலும் இதுபோன்ற சூழல் இருக்கிறதா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
Actor vishal
இதற்கு பதிலளித்த விஷால், நடிகர் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். பட வாய்ப்புக்காக அட்ஜஸ்மெண்ட்டுக்கு எவனாவது கூப்பிட்டால் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்கனும். காலம் காலமாக தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இங்க உப்மா கம்பெனிகள் நிறைய இருக்கின்றன.
இதையும் படியுங்கள்... தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் யார்... யார்? முதலிடத்தில் இந்த தமிழ் நடிகையா?
vishal about srireddy
அவர் வேண்டுமென்றே ஒரு அலுவலகத்தை போட்டு ஒரு போட்டோஷூட்னு சொல்லி பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் தான் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறான் என்றால் அவனை செருப்பாலயே அடிக்கும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். எங்களிடம் யாரேனும் இதுதொடர்பாக புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் கூறினார்.
அப்போது உங்கள் மீதே ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தாரே என்கிற கேள்வி கேட்டதும், சிரித்துக்கொண்டே பதிலளித்த விஷால், ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும் என கூறினார்.
vishal Birthday
அதேபோல் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் நடத்த உள்ளது குறித்த கேள்வி, எதுக்கு ஸ்டிரைக் நடத்த வேண்டும், படப்பிடிப்புகளை நிறுத்தினால் இங்கு பல தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும். நீங்கள் ஸ்டிரைக் பண்ணுவதால் என்ன முன்னேற்றம் வரப்போகிறது என ஆவேசமாக பேசினார் விஷால். தயாரிப்பாளர் சங்கம் நடத்த உள்ள இந்த ஸ்டிரைக்கிற்கு நடிகர் சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ராம் சரணுடன் நடிக்க கோடிகளில் பேசப்பட்ட சம்பளம்! வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி; ஏன் தெரியுமா?