விருமன்' பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ...3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
விருமன் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 8.2 கோடி வசூல் செய்து அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. கார்த்தியின் ரிலீஸ் தேதியில் அதிக சாதனை படைத்தது விருமன் மட்டும் தானாம்.

viruman
நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் இந்த படம் 8 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியான இரண்டாம் நாளில் 8.45 கோடியாகவும் , மூன்றாவது நாளில் 10 கோடியாகவும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன் அதிகரித்துள்ளது.
viruman
வார இறுதி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15 விடுமுறை என்பதால் முதல் வாரத்தின் படத்தின் வசூல் சீராக இருக்கும் என்று படக்குழு காத்திருக்கின்றனர். இப்படம் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... அருண் விஜய்யின் 'யானை' டிஜிட்டல் வெளியீடு... எப்ப தெரியுமா?
விருமன் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் 8.2 கோடி வசூல் செய்து அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. கார்த்தியின் ரிலீஸ் தேதியில் அதிக சாதனை படைத்தது விருமன் மட்டும் தானாம்.
viruman
ஒரு கிராமப்புற குடும்ப நாடகமான இது கிராமங்களில் நன்றாக ஓடியதாக கூறப்படுகிறது. அதேபோல நகரங்களிலும் வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு சென்னை திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Independence Day 2022 : 75-வது சுதந்திர தின ஸ்பெஷல்!சுதந்திர திருநாளில்...தேசபக்தியை உணர்த்தும் படங்களில் சில
viruman
இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், வடிவுக்கரசி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படதற்றத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமான படமான இதை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...... இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்
கார்த்தி தற்போது சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின் வெளியிட்டிற்காக காத்திருக்கிறார். அதேபோல அதிதி சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார்.