விஜய் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன விஜய் மக்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ட்விட்டர் பதிவை விஜயின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்னும் பெயரில் ஒரு புதிய கட்சியை துவங்கி அதன் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டனர். நகராட்சி தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர்.
vijay
முதலில் தனது பெயரில் கட்சி பதிய வேண்டாம் என தன் தந்தையிடம் கண்டிப்பாக கூறி இருந்த விஜய் மெல்ல மெல்ல மனது கரைய ஆரம்பித்துள்ளார். அதன்படி அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..தன் மகளை நினைத்து பூரித்து போன மகேஷ் பாபு...வைரல் வீடியோ இதோ
vijay makkal iyakkam
அதோடு விஜய் மக்கள் இயக்கத்திற்கு என அதிகாரப்பூர்வமான சமூக வலைதளமும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அதில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிலும் விஜயின் அறிவுறுத்தலின் படி என்னும் வாசகமும் இடம் பெறுகிறது. அதன்படி நாளை கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...செப்டம்பர் 2022 OTT வெளியீடு எந்த எந்த படங்கள் தெரியுமா? பட்டியல் இதோ !
VARISU
மேலும் விஜயின் சார்பாக வாழ்த்துக்கள் எனவும் என குறிப்பிட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ட்விட்டர் பதிவை விஜயின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!
Varisu
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிக்கா மந்தனா நாயகியாக நடிக்க தமன் இசையமைக்கவுள்ளார். படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தின் மூன்று பார்வைகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.