bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!

அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Radhika sarathkumar tweet director bharathiraja health condition

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இயர்க்குநர்  ஒரு நாள் அங்கேயே தங்கி பின் சென்னை திரும்பினார். பின்னர் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் வருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பாரதி ராஜா, அஜீரண கோளாறு காரணாமாக அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டது. 

பின்னர் பாரதிராஜாவின் மேல் சிகிச்சைக்காக எம் ஜி எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

மேலும் செய்திகளுக்கு... உடலோடு ஒட்டிய ஜிம் உடையுடன் சுற்றித்திரியும் விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே

Radhika sarathkumar tweet director bharathiraja health condition

முன்னதாக மருத்துவமனையில் இருந்த இயக்குனரை இசையமைப்பாளர் இளையராஜா, பாடல் ஆசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தினர்.  இந்நிலைகள் இன்று இயக்குனர் பாரதிராஜாவை நடிகை ராதிகா சரத்குமார் நெறி;ல் சந்தித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டில், "பிரார்த்தனைக்கு சக்தி உண்டு, வைப்ரேஷங்களும் உள்ளன. இன்று எனது இயக்குனரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார். எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம்  மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் செய்திகளுக்கு...96 ஜானு - வா இது?.. அல்டரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்!

பாரதிராஜா தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகைகள்  பலரை அறிமுகப்படுத்தியவர். ராதா,ராதிகா, ரேவதி என முன்னணி நடிகைகள் பலரும் இவர் இயக்கத்தில் தான் உருவாக்கினார். 16 வயதினிலே ஸ்ரீதேவி துவங்கி  அலைகள் ஓய்வதில்லை ராதா,  மண்வாசனை ரேவதி, கிழக்கே போகுது ரயில் ராதிகா என இவர் எடுக்கும் படங்களில் நடிக்கும் நாயகிகளுக்கு திரை பெயர் இவர் கொடுத்ததே. பல முன்னணி கதாநாயகிகளை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு.  தங்களை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநரை மறவாத நடிகை ராதிகா தற்போது பாரதிராஜாவின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...Vendhu Thanindhathu Kaadu Audio Launch : வெளியானது 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

Radhika sarathkumar tweet director bharathiraja health condition

படம் இயக்குவது, தயாரிப்பதோடு, அவ்வப்போது திரையிலும் தோன்றி வந்த பாரதிராஜா இறுதியாக மீண்டும் ஒரு மரியாதை என்னும் படத்தை இயக்கி இருந்தார். இதை அடுத்து சிம்புவின் ஈஸ்வரன், ராக்கி குற்றம் குற்றமே, தனுஷின் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலத்தில்  தனுஷின் தாத்தாவாக நடித்து வரவேற்பை பெற்று இருந்தார் பாரதிராஜா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios