சிம்பு வெந்து தணிந்தது காடு டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ் சினிமா பிரபலமும், வாரிசு நடிகருமான சிலம்பரசன் சமீபகாலமாக சறுக்கல்களை கண்டு வந்த நிலையில் அவரது காத்திருப்பு வெற்றியாக முந்தியா மாநாடு அமைந்தது. இதன் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு கிடைத்த அங்கிகாரமாகவே இது அமைந்தது. முன்னதாக பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, பல பஞ்சாயத்துகளில் சிக்கிய பின்னரே திரை கண்டது. டைம் லூப் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்த மாநாடு படத்தை அடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இளசுகளை கவர்ந்த விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் வெந்து தணித்தது காடு படத்திற்காக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார் சிம்பு. இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டார் நடிகர் சிம்பு . இது குறித்தான புகைப்படங்கள் வைரலான கையோடு படத்தின் முதல் பார்வையும் வைரலானது.
மேலும் செய்திகளுக்கு...ஆயிரம் கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் வரமாட்டேன்... பிரபல நடிகரின் பிடிவாதத்தால் தொகுப்பாளரை மாற்றிய பிக்பாஸ்
இதையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைபில் உருவான பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்தாலி நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகிய முக்கிய வேடங்களில் தோன்றவுள்ளனர். சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.
படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேசன் தயாரித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
இதையும் படியுங்கள்... நிர்வாண போட்டோஷூட் ஏன்?... ரன்வீர் சிங்கிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்திய போலீசார் - வாக்குமூலம் அளித்த நாயகன்
படம் வெளியாக ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தியை தயாரிப்பாளர் வெளியிட்டிருந்தார். அதோடு இந்த விழாவிற்காக அமைக்கப்பட்ட செட் குறித்த மேக்கிங் வீடியோவையும் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்... கிளாமராக போட்டோஷூட் நடத்தி கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரேமம் நாயகி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள ட்ரைலர் & இசை வெளியீட்டு விழா குறித்த அழைப்பிதழ்இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான மேடையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

