MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிளாமராக போட்டோஷூட் நடத்தி கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரேமம் நாயகி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

கிளாமராக போட்டோஷூட் நடத்தி கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரேமம் நாயகி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

madonna sebastian : உடல் எடையை குறைத்த பின்னர் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வரும் மடோனா செபஸ்டியன், தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். 

2 Min read
Author : Ganesh A
Published : Aug 29 2022, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயினாக நடித்திருந்தனர். இவர்கள் மூவரின் கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதியும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. இதனால் இன்றளவும் அவர்களுக்கு அடையாளம் தந்த படமாக பிரேமம் உள்ளது.

26

பிரேமம் படத்துக்கு பின்னர் இந்த மூன்று நாயகிகளுக்கு தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் நடிகை மடோனா செபஸ்டியன் தமிழில் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கவண் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பேமஸ் ஆனார்.

36

பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற அவர், அங்கு நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ரிலீசான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு தற்போது டோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... விஜய்யை ஏதாச்சும் சொல்லிட்டோம்னா போதும்... அவளுக்கு சுளீர்னு கோபம் வந்துரும் - ஸ்ரீமதியின் தாய் உருக்கம்

46

இவர் நடிப்பதோடு மட்டுமின்றி அவ்வப்போது தனக்குள் இருக்கும் இசைத் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். மலையாளத்தில் இரண்டு படங்களில் பாடியுள்ள அவர், தமிழில் கவண் படத்தில் இடம்பெறும் ஹாப்பி நியூ இயர் பாடலை டி.ராஜேந்தர் உடன் இணைந்து பாடி இருந்தார்.

56

நடிகை மடோனா செபஸ்டியன் உடல் எடையை குறைத்த பின்னர் விதவிதமாக போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

66

கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை கூறும் விதமாக நடிகை மடோனா செபஸ்டியன் இவ்வாறு போட்டோஷூட் நடத்தி உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... காதலியை கரம்பிடிக்கிறார் ‘குக் வித் கோமாளி’ புகழ்... வெளியானது திருமண தேதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
Recommended image2
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image3
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved