விஜய்யை ஏதாச்சும் சொல்லிட்டோம்னா போதும்... அவளுக்கு சுளீர்னு கோபம் வந்துரும் - ஸ்ரீமதியின் தாய் உருக்கம்
srimathi : கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார், தனது மகளுக்கு பிடித்த நடிகர் குறித்தும், அவர் என்னென்ன விரும்பி பார்ப்பார் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த ஸ்ரீமதி என்கிற மாணவி, கடந்த மாதம் 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அந்த ஊரை சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. பள்ளியினுள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை தீயிட்டு கொளுத்தியதோடு மட்டுமின்றி பள்ளியையும் சூரையாடினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள்... என்ன கொடுமை சார் இது... இந்த சட்டையோட விலை 50 ஆயிரத்துக்கு மேலயா...! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைகர் நாயகன்
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த அவர்களுக்கு சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வாறு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த வழக்கு. இந்த நிலையில், ஸ்ரீமதியின் தாயார், தனது மகளுக்கு பிடித்த நடிகர் குறித்தும், அவர் என்னென்ன விரும்பி பார்ப்பார் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அதன்படி ஸ்ரீமதி, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாம். அவருக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் என்றும், வீட்டில் விஜய் பாட்டை போட்டு நடனம் ஆடிக்கொண்டிருப்பார் என்று கூறிய அவர், விஜய்யை நம்ம ஏதாச்சும் சொல்லிவிட்டால் அவளுக்கு ரொம்ப கோபம் வரும் என்றும் கூறி உள்ளார். ஸ்ரீமதியின் தாயார் அளித்த இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அச்சச்சோ... விஜய்க்கு நடந்தது இப்போ ரஜினிக்கும் நடக்குதே... கடும் அப்செட்டில் நெல்சன்