நிர்வாண போட்டோஷூட் ஏன்?... ரன்வீர் சிங்கிடம் 2 மணிநேரம் விசாரணை நடத்திய போலீசார் - வாக்குமூலம் அளித்த நாயகன்
Ranveer singh : நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். நடிகை தீபிகா படுகோனேவின் கணவரான இவர், கடந்த மாதம் நிர்வாணமாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது இந்த நிர்வாண போடோஷூட்டுக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பின.
இதையடுத்து இந்த போட்டோஷூட் மூலம் ரன்வீர் சிங், பெண்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவரின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ரன்வீர் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இதையும் படியுங்கள்... அஞ்சலியை தொடர்ந்து வாணி போஜனை டார்கெட் செய்யும் நடிகர் ஜெய்...! கோலிவுட்டில் கிளம்பிய புது சர்ச்சை
இதைத்தொடர்ந்து நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று நேற்று விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அது பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று செம்பூர் காவல் நிலையத்தில் ஆஜரான ரன்வீர் சிங்கிடம், அவர் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியதன் நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 2 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. அப்போது, தான் பதிவிட்ட நிர்வாண புகைப்படங்கள் இந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தனக்கு தெரியாது என ரன்வீர் சிங் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்