Asianet News TamilAsianet News Tamil

செப்டம்பர் 2022 OTT வெளியீடு எந்த எந்த படங்கள் தெரியுமா? பட்டியல் இதோ !

september 2022 web series and movies list of upcoming  : செப்டம்பர் 2022 -ல் ஓடிடிக்கு வரும் படங்கள் எவை எவை என பார்க்கலாம்...   

september 2022 web series and movies list of upcoming
Author
First Published Aug 30, 2022, 7:00 PM IST

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி வெளியீடே அதிகமாக உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் படம் வெளியாவதில் பல சிக்கல்களை வந்த சின்ன பட்ஜெட் படங்கள் பலவும் இணையதளத்தில் தான் வெளியானது இதற்கு பிள்ளையார் சுழி வகையில் அமைந்தது சூரரை போற்று. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதோடு இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாது என கூட்டாக அறிவித்தனர். பின்னர் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்களுக்கு பூட்டு போடப்பட்டதை தொடர்ந்து ரிலீசுக்கு தயாரான படங்கள் நேரடியாக ஓடிடிக்கு வந்தது. தற்போது நிலைமை சரியான போதிலும் பல படங்கள் நேரடியாக இணையதளத்திலும், சில படங்கள் வெளியான சில வாரங்களுக்கு பிறகு ஓடிடியிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 2022 -ல் ஓடிடிக்கு வரும் படங்கள் எவை எவை என பார்க்கலாம்...   

மை டியர் பூதம் :


வெளியீட்டு தேதி: செப்டம்பர் 2
ஓடிடி தளம் : Zee5

மேலும் செய்திகளுக்கு...bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!

september 2022 web series and movies list of upcoming
பிரபுதேவா குழந்தைகளை கவரும் விதத்தில் நடித்திருந்த படம் தான் மை டியர் பூதம். பண்ணு என்னும் சிறுவன் ஒரு குகையில் இருந்து மனித உருவம் பொரித்த பொம்மையை கண்டு பிடிக்கிறார். ஆனால் அது விழுது உடைந்து விடவே அதிலிருந்து புத்தம் வெளிப்படுகிறது. பின்னர் அந்த புத்தம் சிறுவனுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதே படத்தின் கதையாகும். சிறுவர்களை கவர்ந்த இந்த படத்தை என்.ராகவன் என்பவர் இயக்கியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... உடலோடு ஒட்டிய ஜிம் உடையுடன் சுற்றித்திரியும் விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே

கட்புட்லி :

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 2
ஓடிடி தளம் :  ஹாட்ஸ்டார் 

september 2022 web series and movies list of upcoming

கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க ஒரு போலீஸ் அதிகாரியின் எடுக்கும் முயற்சியை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது.  போலீஸ் அதிகாரிகள் மஞ்சித் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் அக்ஷய் குமார் உடன். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், குர்ப்ரீத் குக்கி, சந்திராச்சிர் சிங் மற்றும் சர்குன் மேத்தா ஆகியோர் நடித்துள்ளனர். 

விக்ராந்த் ரோனா: 

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 2
ஓடிடி தளம் : Zee5   

september 2022 web series and movies list of upcoming

வெப்பமண்டல மழைக்காடுகளின் மையத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற  பல விசித்திரமான நிகழ்வுகளை உள்ளடக்கியது.. இதில் முக்கிய வேடத்தில் கிச்சா சுதீபா நடிக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...96 ஜானு - வா இது?.. அல்டரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்!

தி டைரி ஆஃப் சீரியல் கில்லர் : 

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 7

ஓடிடி தளம் : நெட்ஃபிக்ஸ்

september 2022 web series and movies list of upcoming

14 கொலையாளிகள், 14 சிதைக்கப்பட்ட உடல்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தொடர் கொலைகாரன் என மிரட்டும் தி டைரி ஆஃபி சீரியல் கில்லர்ஸ் அமைந்துள்ளது.இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. 

கார்ஸ் ஆன் தி ரோட் : 

வெளியீட்டு தேதி: செப்டம்பர் 8
ஓடிடி தளம் :  ஹாட்ஸ்டார்

september 2022 web series and movies list of upcoming

அதிகம் சிறுவர்களால் கார்ஸ் ஆன் தி ரோட்.  மேட்டரின் சகோதரி, லைட்னிங் மெக்வீன் மற்றும் மேட்டரைப் பார்க்க, நாடு முழுவதும் சாலைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். 

தி இம்பர் ஃபெக்ட்ஸ் :

வெளியீட்டு தேதி:  செப்டம்பர் 8
ஓடிடி தளம் :  நெட்ஃபிக்ஸ்

september 2022 web series and movies list of upcoming

தீய விஞ்ஞானிகள் சிலரை அரக்கர்களாக்குகிறார்கள். படி கட்டாயப்படுத்தினர்.  கல்லூரி வாழ்வு , டீனேஜ் காதல், ஆங்காங்கே அசுரன் பிறழ்வுகள் என பார்ப்பவர்களை மிரட்ட வருகிறது தி இம்பர் ஃபெக்ட்ஸ் .

Follow Us:
Download App:
  • android
  • ios