தன் மகளை நினைத்து பூரித்து போன மகேஷ் பாபு...வைரல் வீடியோ இதோ

மகேஷ்பாபு தனது செல்ல மகள் தனக்கு பின்னால் மற்ற போட்டியாளர்கள் நடனம் ஆடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்

mahesh babu daughter sitara dance penne song from sarkaru vaari paata in telugu reality show

பிரபல ஜி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் இந்தியா டான்ஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவிற்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவரது மகளுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது குறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்த ப்ரோமோவில் தந்தை மகள் இருவரும் பிரமாண்டமாக நுழைவதை காண முடிந்தது. மகேஷ்பாபு தனது மகள் சித்தாராவின் கைகளை பிடித்து மேடைக்குச் சென்றார். மைக்கை எடுத்துக்கொண்ட மகேஷ்பாபு நடனத்தை ஒரு கொண்டாட்டம் என விவரித்தார்.

கருப்பு நிற முழு கை டிசைன் மற்றும் ஒரே மாதிரியான உடை அணிந்து  அவர்கள் எப்பொழுதும் போல் ஒன்றாக நடனம் ஆடினார்கள். திரையரங்குகளில் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சர்கார் வாரி பட்டா படத்தின் பாடல் ஆன பென்னி பாடலுக்கு நடனம் ஆடினார். சித்தாரா தனது தந்தையின் பட பாடலுக்கு அழகாக ஆடியிருந்தார். 

மேலும் செய்திகளுக்கு...செப்டம்பர் 2022 OTT வெளியீடு எந்த எந்த படங்கள் தெரியுமா? பட்டியல் இதோ !

முன்னதாக இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றது. மற்றும் சித்தாரா டி ஐ டி தெலுங்கு மேடையில் சித்தாரா பென்னி ஹிட் ஸ்டெப் போட்டார். மகேஷ்பாபு தனது செல்ல மகள் தனக்கு பின்னால் மற்ற போட்டியாளர்கள் நடனம் ஆடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். லைஃப் ஸ்டூடியோ பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் பெண்ணுக்கு படி ஸ்டெப்புகளை போட்ட சித்தாராவை அன்பால் அரவணைத்தார் மகேஷ்பாபு .

மேலும் செய்திகளுக்கு...bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!

சமீபத்தில் மகேஷ்பாபு தனது பிறந்தநாளை கொண்டாடினார் இதையொட்டி அவரது பிளாக்பஸ்டர் படமான போக்கிரியின் 200க்கும் மேற்பட்ட சிறப்பு காட்சிகள் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது இந்திய படத்திற்கான சாதனையாக கருதப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த வருமானத்தை மகேஷ் பாபு அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும் குழந்தைகளின் கல்வி மற்றும் இதய செயல்பாடுகளுக்கான நிதியாக அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு... உடலோடு ஒட்டிய ஜிம் உடையுடன் சுற்றித்திரியும் விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே

இதற்கிடையே மகேஷ்பாபு தனது 28 வது படத்தில் இயக்குனர் விக்ரம் ஸ்ரீனிவாசவுடன் இணைந்துள்ளார். வித்தியாசமான கான்செப்ட் கொண்ட பொழுதுபோக்காக இந்த படம் இருக்கும் என தெரிகிறது. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios