நடிகர் விஜய் வீட்டு வாசலில் புதிதாக வைக்கப்பட்ட இரண்டு சாமி சிலைகள்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்
சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் புதிதாக இரண்டு கடவுள் சிலைகள் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய்.
நடிகர் விஜய், ஒரு கிறிஸ்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மத ரீதியாக ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கினால் ஜோசப் விஜய் என தனது முழு பெயரையும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டுவார். இப்படித்தான் மெர்சல் படம் வெளியான சமையத்தில் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு அறிக்கை வெளியிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இதையும் படியுங்கள்... சங்கீதாவுக்கு அதைத்தவிர எதுவும் தெரியாது.. மருமகள் பற்றி விஜய்யின் அம்மா ஷோபா என்னென்ன சொல்லீருக்காங்க பாருங்க
சமீபத்தில் பீஸ்ட் படம் ரிலீசானபோது, கூட அவர் அளித்த பேட்டியில் கடவுள் நம்பிக்கை குறித்து பேசி இருந்தார் விஜய். அதில், தனக்கு எம்மதமும் சம்மதம் என தெரிவித்த அவர், தான் கோவிலுக்கும் போவேன், சர்ச்சுக்கும் போவேன், மசூதிக்கும் போவேன் என கூறி இருந்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் வீட்டு வாசலில் புதிதாக இரண்டு கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அதன்படி விஜய்யின் வீட்டு வாயிலில் இருக்கு பிரம்மாண்ட கேட் அருகே இடதுபுறம் அம்மன் சிலையும், வலதுபுறம் பிள்ளையார் சிலையும் வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வில் இருந்து விலகிய காஜல் அகர்வால்... கமலுக்கு ஜோடியாக நடிக்க திருமணமான நடிகையை களமிறக்கும் ஷங்கர்?