சங்கீதாவுக்கு அதைத்தவிர எதுவும் தெரியாது.. மருமகள் பற்றி விஜய்யின் அம்மா ஷோபா என்னென்ன சொல்லீருக்காங்க பாருங்க
sangeetha vijay : சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பற்றி ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார்.
தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனது தந்தையின் உதவியுடன் சினிமாவுக்குள் வந்தாலும், பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் வெற்றிகரமான நடிகராக உயர்ந்தார். இன்று இவருக்கென தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார் விஜய்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் விஜய்யின் தாயார் ஷோபாவும் பாடகியாக சினிமாவில் கலக்கியவர் ஆவார். இவர் விஜய்யுடன் சேர்ந்தே ஒரு சில பாடல்களை பாடி உள்ளார். விஜய்யின் மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்திலும், மகள் திவ்யா சாஷாவும் தெறி படத்திலும் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தனர்.
இவ்வாறு விஜய்யின் குடும்பத்தினர் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தலைகாட்டிவிட்டனர். ஆனால் விஜய்யின் மனைவி மட்டும் இதுவரை சினிமா பக்கம் வந்ததே இல்லை. நடிகர் விஜய் - சங்கீதா தம்பதிக்கு கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருமே காதலித்து தான் திருமணம் செய்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... இந்தியன் 2-வில் இருந்து விலகிய காஜல் அகர்வால்... கமலுக்கு ஜோடியாக நடிக்க திருமணமான நடிகையை களமிறக்கும் ஷங்கர்?
இந்நிலையில், தனது மருமகள் சங்கீதா பற்றி, விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது : “நானும் சங்கீதாவும் மாமியார், மருமகள்னு சொல்றதைவிட நல்ல ஃப்ரெண்ட்ஸ்-னு தான் சொல்லனும். வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதில் சங்கீதாவைப் போல் யாரையும் பார்க்க முடியாது.
வீடு, குழந்தைகள் இதைத்தாண்டி அவருக்கு எதுவும் தெரியாது. எனக்கு நல்ல மருமகள். என்னுடைய பேரனுக்கும், பேத்திக்கும் என்மீது அலாதி பிரியம். ரெண்டு பேருமே அமைதியானவங்க. பேசும்போதுகூட அமைதியா தான் பேசிப்பாங்க. அதைப் பார்க்குறப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்” என ஷோபா சந்திரசேகர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?