Cobra movie : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விக்ரமின் ‘கோப்ரா’?
Cobra movie : கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் அவர் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே தும்பி துள்ளல் என்கிற பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு நடிகர் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற ஏப்ரல் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோப்ரா படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கோப்ரா படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும், இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.... kajal aggarwal : நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... கவுதம் - காஜல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்