- Home
- Cinema
- Kajal Aggarwal : நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை..! கவுதம் - காஜல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்
Kajal Aggarwal : நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை..! கவுதம் - காஜல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்
kajal aggarwal : நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை காஜல் அகர்வால், கடந்த 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் ராம்சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் காஜல்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானதால், அவர் கைவசம் இருந்த படங்கள் ஒவ்வொன்றாக கைநழுவிப் போனது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத காஜல், தான் அம்மா ஆகப்போவதை நினைத்து மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... KGF 2 : ஒவ்வொரு டயலாக்கும் ‘பஞ்ச்’ தான்... தமிழில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு வசனம் எழுதியது இந்த நடிகரா?