- Home
- Cinema
- KGF 2 : ஒவ்வொரு டயலாக்கும் ‘பஞ்ச்’ தான்... தமிழில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு வசனம் எழுதியது இந்த நடிகரா?
KGF 2 : ஒவ்வொரு டயலாக்கும் ‘பஞ்ச்’ தான்... தமிழில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு வசனம் எழுதியது இந்த நடிகரா?
KGF 2 : மொழிமாற்று படங்களுக்கான டப்பிங் வேலைகளை செய்துவரும் அசோக், கே.ஜி.எஃப் 2 படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ் புத்தாண்டன்று திரையரங்குகளில் வெளியானது. யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் அதனை பூர்த்தி செய்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்ட இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இப்படம் வெளியான 4 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் வசனங்கள் என்றே சொல்லலாம். அதிலும் தமிழ் பதிப்பில் ராக்கி பாய் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அரங்கம் அதிர வரவேற்பை பெற்று வருகின்றன. கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் தமிழில் வசனம் எழுதியது அசோக் என்பவர் தான்.
கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விருமாண்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக், ஆயுள் ரேகை என்கிற படத்தையும் இயக்கி உள்ளார். இதுதவிர பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஞாபக மறதி இருப்பது தெரியாமல் அவரிடம் சண்டையிட்டு பின்னர் அவர் சமாதானப்படுத்தியதும் கட்டிப்பிடித்து அழும் ‘நட்ராஜ் அண்ணன்’ என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.
மொழிமாற்று படங்களுக்கான டப்பிங் வேலைகளை செய்துவரும் இவர், கே.ஜி.எஃப் 2 படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Rajinikanth : ‘பீஸ்ட்’டை விட ஐஸ்கிரீம் நல்லா ‘டேஸ்ட்’டா இருந்துச்சு...! விஜய் படத்தை பங்கமாக கலாய்த்த ரஜினி