Rajinikanth : ’பீஸ்ட்’ படத்தை விட ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சு..! பங்கமாக கலாய்த்த ரஜினி
Rajinikanth : பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னரே நெல்சன் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் ரஜினியின் 169 படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கபட்டது.

பீஸ்ட் சொதப்பல்
விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் ஏராளமான லாஜிக் மீறல்கள் காரணமாக இப்படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது.
நெல்சனின் அடுத்த படம் தலைவர் 169
பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னரே நெல்சன் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் ரஜினியின் 169 படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கபட்டது. பீஸ்ட் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
பீஸ்ட்டை கலாய்த்த ரஜினி
இதனிடையே பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிகாந்த், அப்படத்தின் இடைவேளையில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட சில ஸ்நாக்ஸ்களை விரும்பி வாங்கி சாப்பிட்டாராம். பின்னர் படம் முடிந்ததும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் மவுனமாக இருந்த ரஜினியிடம் அவரது உறவினர் ஒருவர் படம் எப்படி இருக்குனு கேட்டாராம். இதற்கு ரஜினியோ ‘ஐஸ்கிரீம் நல்லா டேஸ்டா இருந்துச்சு’னு சொல்லி சிரித்துள்ளார்.
குழப்பத்தில் சூப்பர்ஸ்டார்
இதிலிருந்தே அவருக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என தெரியவர, அடுத்த படத்தை நெல்சனிடம் கொடுக்கலாமா? அல்லது அட்லீ, தேசிங்கு பெரியசாமி இவர்களில் யாரையாவது மாற்றலாமா? என்ற முடிவை நீங்களே எடுங்கள் என்று ரஜினியிடன் சொல்லிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் சூப்பர்ஸ்டார்.
இதையும் படியுங்கள்... Thalapathy 66 :சென்னைல தான் ஷூட்டிங் நடத்தனும்.. ‘தளபதி 66’ படக்குழுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்- பின்னணி என்ன?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.